இயூ டீ, சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயூடீ
பெயர் transcription(s)
 • சீனம்油池
 • பின்யின்Yóuchí
 • Hokkien POJIû-tî
 • மலாய்Yew Tee
 • ஆங்கிலம்Yew Tee
நகர மையத்தின் வான் தோற்றம்
நகர மையத்தின் வான் தோற்றம்
நாடுசிங்கப்பூர்

இயூ டீ சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சுவா சூ காங் குழுத்தொகுதியின் துணைப் பிரிவான இங்குப் பல அரசாங்க வீடுகள், தனியார் வீடுகள் உள்ளன.

பெயர்க் காரணமும் வரலாறும்[தொகு]

இயூ டீ என்றால் எண்ணெய்க் குளம் (Oil Pond) என்று அர்த்தம். இயூ டீ ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த கால கட்டங்களில் எண்ணெய்க் கிடங்காக இருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் 300 குடும்பங்களைக் கொண்ட சிறிய கிராமமாக இருந்தது. காய்கறிகள், வாத்துகள், கோழிகள் போன்றவை வளர்க்கப்பட்டன. 1980ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மேம்பாட்டுத் திட்டத்தினால் இங்கிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இயூ டீ குழுத் தொகுதி[தொகு]

இத்தொகுதி நால்வர் கொண்ட குழுத் தொகுதி ஆகும். 2015-க்கு முன்பு இது சுவா சூ காங் குழுத் தொகுதியிலிருந்தது. சுவா சூ காங்கின் புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1993-ஆம் ஆண்டிலிருந்து இயூ டீயில் பல வீடுகள் கட்டப்பட்டன. இப்பகுதி இயூ டீ, லிம்பாங் என்று இரு நகரங்களாகப் பிரிக்கப்பட்டது.

கட்டமைப்பு[தொகு]

கல்வி[தொகு]

இயூ டீ பகுதியைச் சுற்றி வாழும் மக்களின் வசதிக்காகப் பல கல்விக் கூடங்கள் உள்ளன. டீ லா சா தொடக்கப்பள்ளி, கிராஞ்சி தொடக்கப்பள்ளி, யூனிட்டி தொடக்கப்பள்ளி, இயூ டி தொடக்கப்பள்ளி போன்ற தொடக்கப் பள்ளிகள் உள்ளன. மேலும், கிராஞ்சி உயர்நிலைப்பள்ளி, ரீஜண்ட் உயர்நிலைப்பள்ளி, யூனிட்டி உயர்நிலைப்பள்ளி ஆகிய உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

இயூ டீ பகுதியைச் சுற்றி வாழும் மக்களின் போக்குவரத்திற்காக இயூ டீ பெரு விரைவு இரயில் நிலையம் 1996-ஆம் ஆண்டு ஜூரோங் கிழக்கிலிருந்து 16 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல பேருந்து வசதிகளும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு[தொகு]

இயூ டீ பகுதியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக மூன்று பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, லிம்பங் பூங்கா, ஸ்டேக்மோண்ட் பூங்கா, இயூ டீ பூங்கா ஆகியவை ஆகும். மேலும், இப்பகுதியில் விளையாட்டு வளாகம் ஒன்றும் உள்ளது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு புதிய பேரங்காடி திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பேரங்காடிக்கு ‘இயூ டீ பாய்ண்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள காண்டோமினியம் ‘இயூ டீ வசிப்பிடங்கள்’ என்று அழைக்கப்படுகிறது.

இராணுவ முகாம்கள்[தொகு]

இயூ டீ பகுதியில் இராணுவ முகாம்களும் உள்ளன. 1994-ஆம் ஆண்டு கிராஞ்சி முகாம் கட்டப்பட்டது. உட்லண்ட்ஸ் முகாம் 2000-ஆம் ஆண்டில் கிராஞ்சித் தடுப்புக்காவல் முகாமிற்கு மாற்றப்பட்டது. இவ்வாறு இராணுவ முகாம்கள் உள்ளதால் இப்பகுதியில் அதிகப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  • Victor R Savage, Brenda S A Yeoh (2003), Toponymics - A Study of Singapore Street Names, Eastern Universities Press, ISBN 981-210-205-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயூ_டீ,_சிங்கப்பூர்&oldid=2765490" இலிருந்து மீள்விக்கப்பட்டது