இயல்மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயல்மதிப்பு என்பது ஒரு எண்ணுரு அது ஒரு எண்ணில் எந்த இடத்தில் அமையப்பெற்றாலும் அந்த எண்ணுருக்கென்று ஒரு மதிப்பு இருக்கும், அதுவே இயல்மதிப்பாகும். அந்த மதிப்பானது இயல்பாகவே அது பெற்றிருக்கும் மதிப்பாகும். அந்த எண்ணுரு ஒன்றுகள் இடத்தில் வந்தாலும் பத்துகள் இடத்தில் வந்தாலும் நூறுகள் இடத்தில் வந்தாலும் அதன் மதிப்பானது எப்பொழுதும் அது பெற்றிருக்கும் மதிப்பாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டு

256 என்ற எண்ணில் 5 என்ற எண்ணுரு பத்துகள் இடத்தில் வந்திருந்தாலும் அதற்கான இயல்பான மதிப்பு ஐந்தே ஆகும்.

526 என்ற எண்ணில் 5 என்ற எண்ணுரு நூறுகள் இடத்தில் இருந்தாலும் அதன் இயல்பான மதிப்பு ஐந்தே ஆகும்.

265 என்ற எண்ணில் 5 என்ற எண்ணுரு ஒன்றுகள் இடத்தில் இருந்தாலும் அதன் இயல்பான மதிப்பு ஐந்தே ஆகும். இவ்வாறு ஒரு எண்ணுருவின் இயல்பான இயற்கையான மதிப்பு என்றுமே மாறுவதில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்மதிப்பு&oldid=2748626" இருந்து மீள்விக்கப்பட்டது