உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்பியலின் விந்தை எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமபகுதியன்கள் நிலைப்புத்தன்மை வரைபடம்

மந்திரஎண்கள் அல்லது விந்தைஎண்கள் (Magic numbers) என்று அணுக்கரு இயற்பியலில் 2,8,20,28,50,82 மற்றும் 126 போன்ற சில எண்கள் குறிப்பிடப்படுகின்றன. அணுகருவிலுள்ள புரோட்டான்கள் அல்லது நியூட்ரான்களின் எண்ணிக்கை இந்த எண்களில் ஏதாவது ஒன்றுக்குச் சமமாக இருந்தால் அவ்வணு அதிக நிலைத்தன்மைப் பெற்று இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வெண்கள் இயற்பியலின் விந்தை எண்கள் எனப்படுகின்றன. இவ்வேழு எண்கள் மட்டுமே பரவலாக அங்கீகரிக்கப்பட்ட மந்திர எண்களாகும். இவை தவிர மேலும் புரோட்டான்களுக்கு 114,122,124 மற்றும் 164 எண்களும் நியூட்ரான்களுக்கு 184,196, 236 மற்றும் 318 என்ற எண்களும் மந்திர எண்களாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (5 September 2011) "The Impact of Superheavy Elements on the Chemical and Physical Sciences". {{{booktitle}}}. 27 August 2013 அன்று அணுகப்பட்டது.
  2. http://www.eurekalert.org/pub_releases/2008-04/acs-nse031108.php
  3. "Investigation of the stability of superheavy nuclei aroundZ=114 andZ=164". Zeitschrift für Physik 228: 371–386. doi:10.1007/BF01406719. http://link.springer.com/article/10.1007%2FBF01406719/lookinside/000.png. பார்த்த நாள்: 2016-10-01.