இம்மாகினும் போசியாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இம்மாகினும் போசியாவும் (IMMAGINE&POESIA) எழுத்தையும் படிமங்களையும் இணைக்கும் ஓர் பன்னாட்டு சமகாலக் கலை இயக்கமாகும். [1]

Logo-immaginepoesia.gif
இத்தாலியின் டொரினோவில் ஏரோன்வி தாமசு, 2006
இம்மாகினும் போசியாவும் சுவரொட்டி(2008) - கியான்பீரோ அக்டிசு, இத்தாலி

தோற்றம்[தொகு]

இந்த இயக்கம் 2007ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள டொரினோ நகரின் ஆல்ஃபா தியேட்டரோ (Alfa Teatro)வில் டிலான் தாமசின் மகள் ஏரோன்வி தாமசு, லிடியா சியரெல்லி, கியான்பீரோ மற்றும் சில கவிஞர்களும் கலைஞர்களும் அடங்கிய ஓர் சிறு குழுவினால் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் எழுதப்பட்ட காவியங்களின் தாக்கமும் வரைசித்திரங்களின் தாக்கமும் இணைந்தால் ஏற்படும் புதிய கலைவடிவம் அதனை தோற்றுவித்த வடிவங்களைவிட சிறப்பாக இருப்பதுடன் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர். [2] இம்மாகினும் போசியாவும் கௌரவ அங்கத்தினர்களாக அமெரிக்க கவிஞர் லாரென்சு ஃபெர்லிங்கெட்டியும்[3] இத்தாலிய கலைஞர் உகோ நெஸ்போலோவும் உள்ளனர். நார்தர்ன் மிசிகன் பல்கலைக்கழகத்தின் பேராசியரும் கவிஞருமாகிய பெவர்லி மாதெர்னும் அங்கத்தினராக உள்ளார். இயக்கத்தின் அலுவல்முறை கலை மதிப்புரைஞர்களாக மேரி கோர்கியும் [4] என்சோ பாப்பாவும் உள்ளனர்.

Lawrence Ferlinghetti

கொள்கை விளக்க அறிக்கை[தொகு]

இருபது மொழிகளில் பத்து அம்ச கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நான்காவது அம்சமாக கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் " அயல் கருவாக்கல் நேரங்கள்" பரிந்துரைக்கப்படுகின்றன: ஓர் ஓவியர் கவிஞருக்கு கவிதை எழுதத் தூண்டலாம் அல்லது ஓர் கவிஞரின் பாடல்கள் ஓர் ஓவியம் உருவாகக் காரணமாக அமையலாம்.[5] [6]

காட்சிக்கூடம்[தொகு]

Web Site[தொகு]

http://immaginepoesia.jimdo.com/

மேற்கோள்கள்[தொகு]

  1. http://imagespoetry.wordpress.com/honorary-members-of-immaginepoesia-2/
  2. Lidia Chiarelli Immagine & Poesia - The Movement in progress, Cross-Cultural Communications, Merrick, New York, 2013 ISBN 978-0-89304-994-2
  3. http://www.salottoletterario.it/foto_index/certificato_ferlinghetti.pdf
  4. http://imagespoetry.wordpress.com/immaginepoesia-now-and-then-by-mary-gorgy-fine-art-photo-by-adel-gorgy-long-island-n-y/
  5. http://imagespoetry.wordpress.com/the-manifesto-of-immaginepoesia-2/
  6. http://immaginepoesia.jimdo.com/about-us/translations-of-the-manifesto/