இன்னிசை இருநூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்னிசை இருநூறு அறத்தினை உலகுக்கு உணர்த்த எழுதப்பெற்ற நூலாகும். இதன் ஆசிரியர் அரசஞ்சண்முகனார் ஆவார். இந்நூல் இருநூறு இன்னிசை வெண்பாக்களைக் கொண்டுள்ளது. இது மு.ரா. கந்தசாமி கவிராயரால் நடத்தப்பெற்ற விவேக பாநு இதழில் 1904 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. தனி நூலாக ஆக்கித் தருமாறு பலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கவிராயரே 01- 07- 1913 இல் தம் வெளியீடாக இந்நூலை வெளியிட்டார். இந்நூல் சண்முகனாரது அற நெஞ்சத்தைப்ப் புலப்படுத்தும் கட்டளைக் கல் எனப்படுகிறது.

நூலின் தொடக்கம்[தொகு]

நன்னெறி என்னும் கடலினின்று அறிவு என்னும் நாழியால் முகந்துகொள்ளப்பட்டது இவ்வின்னிசை வெண்பா என்று கூறி நூலினைத் தொடங்குகிறார்.

அதிகாரங்கள்[தொகு]

ஈந்நூல் வாழ்த்து முதல் மேல் கீழியல்பு ஈறாக இருபது அதிகாரங்களைக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரம் ஒன்றுக்கு பத்து பாக்களைக் கொண்டுள்ளது

பாடல் எண் 11[தொகு]

                              மெய்யறிவன் நூலின் விதித்த விலக்கிய

                               செய்தலும் செய்யா விடலும் திகழ்அறன்

                               மைதீர் மனநாவால் காயத்தால் வாய்ப்பன
                               செய்கஎஞ் ஞான்றுந் தெரிந்து  
                  
                                                           இப்பாடல் அறத்தின் இலக்கணத்தைக் கூறுகிறது.

பார்வை நூல்[தொகு]

ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னிசை_இருநூறு&oldid=3715213" இலிருந்து மீள்விக்கப்பட்டது