இனவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இனமே மனித இயல்புகளையும் அவர்கள் தகுதிகளையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி, இன வேறுபாடுகள் குறிப்பிட்ட இனங்களை மற்றவர்களிலும் உள்ளார்ந்த அடிப்படையில் மேலானவர்களாக ஆக்குகிறது என்னும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கையே இனவாதம் எனப்படுகிறது. இனவாத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் சில இனத்தவரை வெறுப்பர். அமைப்பு முறையிலான இனவாதத்தின் கீழ் சில இனக்குழுக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும், சிலவற்றுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதையும் காணலாம்.

வரைவிலக்கணம்[தொகு]

இனவாதம் என்பது பொதுவாக இனத்தை அடிப்படையாகக் கொண்ட தப்பபிப்பிராயங்கள், வன்முறை, இனப்பாகுபாடு, அடக்குமுறை என்பவற்றோடு தொடர்புபட்டிருந்தாலும், இதற்கான வரைவிலக்கணங்கள் பல்வேறுபட்டவையாகவும், கடுமையான வாதங்களோடு கூடியவையாகவும் உள்ளன. வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு பொருள் கொடுக்கக்கூடிய இச் சொல்லுக்கு வழமையாக அமைந்துள்ள எதிர்மறைத் தன்மையான பொருளைத் தவிர்ப்பதற்கும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்ஸ்போட் ஆங்கில அகரமுதலியின்படி, ஓரினத்தவரைப் பிற இனத்தவரினின்றும் உயர்ந்தவர்களாகவோ தாழ்ந்தவர்களாகவோ வேறுபடுத்திக் காணக்கூடிய வகையில், ஒவ்வொரு இனத்தினையும் சேர்ந்த எல்லா உறுப்பினரும், அந்தந்த இனத்துக்குரிய இயல்புகளையோ தகுதிகளையோ கொண்டுள்ளார்கள் என்னும் நம்பிக்கை அல்லது கருத்தியலே இனவாதம் ஆகும். மக்குவாரி அகரமுதலி, மனித இனங்கள் அவற்றின் பண்பாட்டைத் தீர்மானிக்கும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு, தமது இனம் உயர்வானது, அது மற்றவர்களை ஆளும் உரிமை கொண்டது என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பதே இனவாதம் என்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனவாதம்&oldid=1792006" இருந்து மீள்விக்கப்பட்டது