இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதர்களுக்கான உடல் நலத்தில் நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய இந்திய மருத்துவமுறைகள் பல உள்ளன. இந்த இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகள் குறித்த கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.

இளம்நிலைப் பட்டப்படிப்புகள்[தொகு]

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் உள்ள இளம்நிலைப் பட்டப்படிப்புகள் குறித்த விபரங்கள்

  1. சித்த மருத்துவ அறிஞர் (இளம்நிலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Siddha Medicine and Surgery)
  2. ஆயுர்வேதாச்சார்யா (இளம்நிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Ayurvedic Medicine and Surgery)
  3. காமில்-ஈ-டிப்-ஓ-ஜாரகட் (இளம்நிலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Unani Medicine and Surgery)
  4. இளம்நிலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (ஆங்கிலம்: Bachelour of Unani Medicine and Surgery)
  5. இளம்நிலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (ஆங்கிலம்: Bachelour of Naturopathy and Yogic Sciences)

முதுநிலைப் பட்டப்படிப்புகள்[தொகு]

இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவப் பிரிவில் உள்ள முதுநிலைப் பட்டப்படிப்புகள் குறித்த விபரங்கள்

  • சித்தா மருத்துவம்
  • சித்தா குணபாடம்
  • சித்தா சிறப்பு மருத்துவம்
  • சித்தா குழந்தை மருத்துவம்
  • சித்தா நோய்நாடல்
  • சித்தா நஞ்சு நூலும் மருத்துவ நூலும்