இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி ( Administrative Staff College of India ) என்பது இந்தியாவில் குடிமைப்பணி மேம்பாடு துறையில் பயிற்சி அளிப்பதற்காக 1956 ஆம் ஆண்டில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக இந்திய அரசு மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளால் கூட்டாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகும். [1] இது ஐதராபாத்தில் உள்ள பெல்லா விஸ்டா என்று அழைக்கப்படும் பேராரின் முன்னாள் இளவரசரின் அரண்மனையில் அமைந்துள்ளது. அவர் ஐதராபாத் இராச்சியத்தின் வெளிப்படையான வாரிசாக இருந்தார். [2] [3]

தொடக்கத்தில் இந்திய அரசு பிரிட்டனில் கல்லூரியை அமைக்க எண்ணியது. முதல் அமர்வு 1948 இல் ஹென்லியில் தொடங்க இருந்தது. இருப்பினும் 1953 ஆம் ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இந்தியாவில் நிர்வாகப் பணியாளர் கல்லூரியை நிறுவ பரிந்துரைத்தது. பெறுநிறுவங்கள் மற்றும் அரசு துறைகள் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தின் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இக்கல்லூரி நிபுணத்துவம் பெற்றது. [4] கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நடவடிக்கைகள் 1973 இல் போர்டு அறக்கட்டளையின் உதவியுடன் தொடங்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஆர். எச். குவாஜா ஜனவரி 1, 2017 அன்று இக்கல்லூரியின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ASCI — A college that moulds administrative mandarins". பார்க்கப்பட்ட நாள் 2011-07-16.
  2. "Princess Dürrühsehvar of Berar". The Telegraph. https://www.telegraph.co.uk/news/obituaries/1510174/Princess-Durruhsehvar-of-Berar.html. 
  3. "A Song of Hyderabad". பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
  4. "World Bank Helps Train New Breed of Professional Urban Managers". பார்க்கப்பட்ட நாள் 2011-07-16.
  5. "RH Khwaja takes charge as ASCI DG".

வெளி இணைப்புகள்[தொகு]