இந்திய கடல் வழிப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ ஆகும். இதில் 13 பெரிய துறைமுகங்களும், 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் கொண்டு அமைந்துள்ளது. இத்துறைமுகங்களின் வழியாக 95 சதவீத வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது. பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக பொறுப்புக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.

பெரிய துறைமுகங்கள்[தொகு]

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகங்கள் காண்ட்லா, மும்பை, மர்மகோவா, புது மங்களுர், கொச்சி ஆகியனவாகும். இந்தியாவின் கிழக்கு கடற்கரையிவல் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் தூத்துக்குடி, சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப், ஹால்தியா, கொல்கத்தா ஆகியவை ஆகும்