உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம்
நிறுவுகை2004
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்முனைவர். சுபோ ராய், தலைவர் [1]
இணையத்தளம்Official Website

இந்திய இணையதளம் & அலைபேசி கழகம் (IAMAI) இந்திய சங்கங்கள் சட்டம், 1986-இன் படி பதிவு செய்யப்பட்ட ஆதாய நோக்கமற்ற தொழில்சேவை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள இணையதளம் மற்றும் அலைபேசி பயனீட்டாளர்களின் மதிப்புக் கூட்டுச்சேவைகளை மேம்படுத்துவதும், விரிவிபடுத்துமே இக்கழகத்தின் தலையாய நோக்கமாகும்.[2][3] மேலும் இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி நிறுவனங்களின் தேவைகளையும், குறைகளையும் மற்றும் சேவை மேம்பாடுகளையும் பயனீட்டாளர்களுக்கும், நிறுவன பங்குதாரர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்வதற்கும் இக்கழகம் ஒரு பாலமாக விளங்குகிறது.[4]

இந்தியாவில் இந்நிறுவனமே, இணையதள மற்றும் அலைபேசி மதிப்புக் கூட்டுச் சேவையில், இணையதள மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கும், பயனீட்டாளர்களுக்கும் மற்றும் அரசுக்கிடையே சிறப்பு பெற்ற பிரதிநிதியாக திகழ்கிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Internet Advertising Boom Next In Line: Experts". Businessworld.in. 2010-03-29. Archived from the original on 2010-05-23. பார்க்கப்பட்ட நாள் 2010-09-21.
  2. Faiz Askari (2009-12-03). "Customer centricity is the key to Internet growth - IAMAI". Indiaprwire.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-21.
  3. "IAMAI :: About Us :: Introduction". Iamai.in. Archived from the original on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-21.
  4. "Internet and Mobile Association of India". Business.mapsofindia.com. 2007-12-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-21.
  5. "India's mobile internet users touch 2 million: Rediff.com Business". Business.rediff.com. 2010-01-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • இந்திய இணையதள மற்றும் அலைபேசி கழகம்[1]