உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் கைப்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் கைப்பந்து (Volleyball in India)  இந்தியா முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் விளையாடப்படுகிறது. கைப்பந்து ஒரு பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டாகும். ஆசிய அளவில் இந்தியா 5 ஆவது இடத்திலும், உலக அளவில் 27 ஆவது இடத்திலும் உள்ளது. இளைஞர் மற்றும் இளையயோா் மட்டங்களில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது. 2003 உலக இளைஞர் வெற்றியாளர் போட்டியில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்தது. தற்போது, இந்தியாவில் இவ்விளையாட்டிற்கான முக்கிய பிரச்சனை நன்கொடையாளா்கள் இல்லாததுதான். இந்திய தேசிய ஆண்கள் அணி தற்பொழுது 78 ஆவது இடத்தில் உள்ளது.[1]

ஆறு அணிகள் பங்கு பெற்ற ஒரு தொடா் போட்டி இந்தியாவின் நான்கு வெவ்வேறு இடங்களில் (பெங்களூர், சென்னை, ஹைதராபாத் மற்றும் யானம்)  நான்கு முறை ஒவ்வெரு அணியும் மற்ற அணியுடன்மோதும் சுழல்முறை பந்தயம்தொடங்கப்பட்டது,   இது இந்திய கைபந்து தொடா் என்று அழைக்கப்படுகிறது. சென்னை, ஹைதராபாத், மும்பை, யானம் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலத்திலிருந்து அணிகள் வந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fédération Internationale de Volleyball (FIVB). "FIVB World Rankings". பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_கைப்பந்து&oldid=3386959" இலிருந்து மீள்விக்கப்பட்டது