உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பெருமை செயல்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பெருமை செயல்திட்டம்
India Pride Project
நிறுவனர்கள்எசு. விசயகுமார் மற்றும் அனுராக் சக்சேனா
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
நிறுவப்பட்டது2014
சேவை புரியும் பகுதிஇந்தியா

இந்தியப் பெருமை செயல்திட்டம் (India Pride Project) என்பது கலை ஆர்வலர்கள் உருவாக்கிய குழுவாகும். இக்குழு இந்தியக் கோயில்கள் மற்றும் கலை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகங்களிலிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களை அடையாளம் காணவும், அவற்றை திரும்பப் பெறவும் பன்னாட்டுக் கலைப்பொருட்கள் மீட்பு நிறுவனம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு கலை ஆர்வலர்களான எசு. விசயகுமார் மற்றும் அனுராக் சக்சேனா ஆகியோர் இணைந்து 2014 ஆம் ஆண்டு நிறுவிய இக்குழு இப்போது உலகம் முழுவதிலுமிருந்தும் ஆர்வலர்களைக் கொண்டுள்ளது.[1][2][3]

மீட்கப்பட்ட சிலைகள்

[தொகு]

நாளந்தாவின் 12 ஆம் நூற்றாண்டு புத்தர்: இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா அருங்காட்சியகத்திலிருந்து பூமிசர்சா முத்திரையில் அமர்ந்திருந்த புத்தரின் வெள்ளி கலந்த ஆறரை அங்குல வெண்கலச் சிலையும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1961 ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத் தளத்திலிருந்து திருடப்பட்ட 13 பிற சிலைகள் இலண்டன் ஏலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.[4] இந்த சிலையின் புகைப்பட பதிவை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஓய்வு பெற்ற பொது இயக்குநர் சச்சீந்திர எதிர்பாராவிதமாக எசு. பிசுவாசு சேமித்து வைத்திருந்தார்.

மற்றொரு புத்தர் சிலை இந்தியாவிற்கு சொந்தமானதென குமார் நிருபிக்க முயற்சிக்கிறார், இதுவும் 1961 ஆம் ஆண்டு திருட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு மாகாண கலை அருங்காட்சியகத்தில் இச்சிலை உள்ளது.[5]

நாகார்ஜுனகொண்டா தொல்பொருள் அருங்காட்சியகத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்ட, கிபி 250 காலத்திய பௌத்த நினைவுச் சின்னத்தை பெல்ஜியத்திலிருந்து மார்ச் 2022-ல் பன்னாட்டுக் கலைப்பொருட்கள் மீட்பு நிறுவனம் மீட்டு வழங்கியது. [6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anuraag Saxena: Returning stolen art to India".
  2. "Facebook sleuths bring home India's stolen idols". The Business Times. 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
  3. Ganapathy, Nirmala (10 November 2018). "Recovering India's stolen art pieces". The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  4. On Independence Day, India gets back its 12th century stolen Buddha statue, Aditi Khanna, PTI, LiveMint, Aug 15 2018
  5. How the mystery of the Missing Buddha statue was solved, Bibek Bhattacharya, Aug 21 2018
  6. Stolen 3rd century sculpture to be repatriated to India from Belgium

புற இணைப்புகள்

[தொகு]