இந்தியன் கிரிகெட் (ஆண்டிதழ்)
இந்தியன் கிரிக்கெட் (Indian Cricket) என்பது 1946 – 47 முதல் 2004 வரை தி இந்து இதழால் வெளியிடப்பட்ட ஒரு துடுப்பாட்ட ஆண்டுப் புத்தகமாகும். 2003 இதழ் வெளியிடப்படவில்லை, இது மொத்தம் 57 பதிப்புகள் உள்ளன. இதன் பதிப்புகள் முதலில் பருவத்தின் அடிப்படையில் தேதியிடப்பட்டன (எ.கா., 1946 – 47) ஆனால், 1962 பதிப்பிலிருந்து, நாள் காட்டி ஆண்டை குறிப்பிட்டு வெளியாயின.
இந்தியன் கிரிக்கெட் ஆண்டிதழ் 1946 – 47 இல் எஸ். கே. குருநாதனினை ஆசிரியராக கொண்டு நிறுவப்பட்டது.[1] அவர் 1966 இல் இறக்கும் வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து தி இந்துவின் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியரும், இந்தியன் கிரிக்கெட்டர் கரஸ்பான்டட் அன்ட் விஸ்டனின் இந்திய துடுப்பாட்ட செய்தியாளருமான பி. என். சுந்தரேசன் பொறுப்பேற்றார். [2] ஜி. விஸ்வநாத் அண்மைய இதழ்களின் ஆசிரியராக இருந்தார். [3]
முதல் பதிப்பு 104 பக்கங்கள் மட்டுமே கொண்டிருந்தது. [2] 2004 ஆம் ஆண்டு பதிப்பு 1240 பக்கங்களைக் கொண்டிருந்தது. [3] துவக்க கால இதழ்கள் சாதாரண அட்டையைக் கொண்டதாக இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டு முதல் கடினமான அட்டையைக் கொண்டு தரமான பதிப்பாக வெளியிடப்பட்டது. [2]
இந்தியன் கிரிக்கெட் ஆண்டிதழ் பெரும்பாலும் விசுடன் துடுப்பாட்டாளர் நாட்குறிப்பை முன்னுதாரமாக கொண்டதாக இருந்தது. இது விஸ்டனின் அதே பக்க அளவைக் கொண்டிருந்தது மேலும் விஸ்டனின் பல வழக்கமான அம்சங்களைப் படியெடுத்தது. [4] இந்தியாவில் உள்நாட்டு துடுப்பாடப் போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்களைக் கொண்டாதாக இது இருந்தது. போட்டி விவரங்களில் சுருக்கமான குறிப்புகள் மற்றும் முழு புள்ளிப் பட்டியல் போன்றவற்றையும் கொண்டிருந்தது. உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகள், சோதனைத் துடுப்பாட்டத்தில் இந்தியா, வெளிநாட்டு சோதனைத் துடுப்பாட்டத்தில் இந்தியா பற்றிய விரிவான புள்ளிவிவரப் பிரிவு இதில் இருந்தது. இந்தியன் கிரிக்கெட்டின் தொடக்கத்திலிருந்தே, விஸ்டனை அடிப்படையாகக் கொண்ட "ஆண்டின் ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்" விருது இருந்தது. [5] 1952 முதல், ஒரு சிறப்பு ஓவியப்படப் பிரிவு இருந்தது, அது ஒரு குறிப்பிடத்தக்க முன்னாள் கிரிக்கெட் வீரரை விவரிப்பதாக இருந்தது. [6]
ஆசிரியர்கள்
[தொகு]- எஸ். கே. குருநாதன் (1947-66)
- பி. என். சுந்தரேசன் (1967-74)
- எஸ். தியாகராஜன் (1975-89)
- பி. வி. வைத்தியநாதன் (1990-98)
- ஜி. விஸ்வநாத் (1999-2004)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ K. N. Prabhu, 50 notout ... marches on (article on the 50 years of Indian Cricket), Indian Cricket 1996, p.75-81.
- ↑ 2.0 2.1 2.2 Prabhu, op. cit.
- ↑ 3.0 3.1 Indian Cricket 2004.
- ↑ See Wisden Cricketers' Almanack#Typical contents for comparison.
- ↑ CricketArchive. The complete list of Indian cricketers of the year. Retrieved 12-22-2008.
- ↑ Indian Cricket 2004, p.17. This article provided the complete list of cricketers to be granted a special portrait.