இணை நிறுவனம்
கணக்கியலில் இணை நிறுவனம் என்று அறியப்படும் நிறுவனம் தன் பங்குகளில் இருபது முதல் ஐம்பது விழுக்காடு பங்குகளை பிற நிறுவனங்களுக்கு விற்று அதன்மூலம் அந்த நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் நிறுவனமாகும். ஒரு நிறுவனத்தின் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பங்குகள் பிற நிறுவனங்களின் வசமிருந்தால், அந்நிறுவனம் கிளை நிறுவனம் என்று அழைக்கப்படும். இணை நிறுவனங்களில் கூட்டணி நிறுவனங்கள் முதலீடு செய்வதும் வருவாய் ஏற்படும் இடத்து அதை சரிக்கட்ட முயல்வதும் வாடிக்கை ஆகும்.[1]
விவரங்கள்
[தொகு]புதியதொரு துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒரு நிறுவனமானது, அந்தத் துறையிலேயே செயல்படும் ஒரு நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் பொருட்டு, அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதும், இரு நிறுவனங்கள் இணைந்து தங்கள் முதலீடுகளை பங்கிட்டு புதியதொரு துறையில் இறங்கும் போதும், நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணை நிறுவனம் ஆகின்றன.[2]