இட்ஸ் எ ஒன்டர்புல் லைப்
இட்ஸ் எ ஒன்டர்புல் லைப்(It's a Wonderful Life) | |
---|---|
இயக்கம் | பிராங் காப்ரா |
தயாரிப்பு | பிராங் காப்ரா |
கதை | Screenplay: பிரான்சிஸ் குட்ரிச் ஆல்பர்டு கக்ட் ஜோ சுவரிலிங் பிராங் காப்ரா சிறுகதை: பிலிப்வாரன் டோர்ன் |
இசை | டிமித்திரி டயோமகின் |
நடிப்பு | ஜேம்ஸ் ஸ்டூவர்ட் டோனா ரிடு லியொனில் பாரிமோர் ஹென்ரி டிராவர்சு |
படத்தொகுப்பு | வில்லியம் கார்ன்பேக் |
விநியோகம் | RKO Radio Pictures |
வெளியீடு | டிசம்பர் 20, 1946 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $3,180,000[1] |
இட்ஸ் எ ஒன்டர்புல் லைப் (It's a Wonderful Life) 1946-ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம், உலகின் சிறந்த 10 படங்களில் ஒன்றாகும். பிலிப்வாரன் டோர்ன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை பிராங் காப்ரா இயக்கி தயாரித்தார்.
ஜார்ஜ் பெய்லி என்ற தொழிலதிபர் வேடத்தில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடித்திருந்தார். கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய தொழிலதிபர் ஜார்ஜ் முடிவு செய்து, ஆற்றுப் பாலம் ஒன்றின் மேல் ஏறி நிற்கிறான். இதை வானுலகில் உள்ள தேவதைகளில் இரண்டு வேடிக்கை பார்க்கின்றன. மனிதர்கள் ஏன் இப்படி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் சாக முடிவு எடுக்கிறார்கள் என்று அனுதாபம் கொண்டு ஒரு தேவதை ஜார்ஜைக் காப்பாற்றுகிறது. ஜார்ஜ், நான் உயிர்வாழ்வதில் அர்த்தமே இல்லை. தன்னால் யாருக்கும் பயன் இல்லை. எல்லோருக்கும் தான் தேவையற்றவன் என்று புலம்புகிறான். இல்லை... உன் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்ற தேவதை, நீ பிறக்காமல் இருந்தால், உன் வீடு, மனைவி என்னவாகி இருப்பார்கள் என்பதை நீ இப்போது பார்ப்பாய் என்று தேவதை ஒரு வரம் தருகிறது.தன் வாழ்நாளில் ஒவ்வொரு செயலும் யாரோ ஒருவருக்குப் பயன்பட்டிருக்கிறது என்று உணர்ந்து, பின் குடும்பத்துடன் சேர்கிறான்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cox 2003, p. 27. Note: The original budget had been set at $3 million.
- ↑ http://www.vikatan.com/av/2009/jun/17062009/av0903.asp[தொடர்பிழந்த இணைப்பு]