இட்ரியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம் ஐதரைடு
இனங்காட்டிகள்
13598-57-7
ChemSpider 146001
EC number 237-074-0
பப்கெம் 166870
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்ரியம் ஐதரைடு (Yttrium hydride) என்பது இட்ரியமும் ஐதரசனும் சேர்ந்து உருவாகும் ஒரு சேர்மமாகும். அருமண் உலோக ஐதரைடுகள் பிரிவின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. பல வடிவங்களில் இட்ரியம் ஐதரைடு காணப்படுகிறது. இவற்றில் மிகவும் பொதுவானது YH2 என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய உலோகச் சேர்மமாகும். YH2 முகமைய கனசதுரக் கட்டமைப்பை கொண்டுள்ள ஓர் உலோகச் சேர்மமாகும்.[1] அதிக அழுத்தத்தின் கீழ், கூடுதல் ஐதரசனுடன் ஒன்றிணைந்து ஓர் அறுகோண அமைப்பைக் கொண்ட மின்காப்புப் பொருளாக YH3 என்ற வாய்பாட்டுக்கு நெருக்கமாக உள்ள ஒரு சேர்மம் உருவாகிறது. இது அறுகோண வடிவமும் 2.6 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியும் கொண்ட படிகமாக காணப்படுகிறது. 12 கிகாபாசுக்கல் அழுத்தத்தில் YH3 ஓர் இடைநிலை நிலைக்கு மாறுகிறது. மேலும் அழுத்தம் 22 கிகாபாசுக்கல் நிலைக்கு அதிகரிக்கும் போது மற்றொரு உலோக முகமைய கனசதுரப் படிகம் உருவாகிறது.[2]

1996 ஆம் ஆண்டில், YH2 இலிருந்து YH3 சேர்மத்திற்கு செல்லும் போது நிகழும் உலோக-மின்காப்பி மாற்றமானது சாளரங்களின் ஒளியியல் நிலையை ஒளிபுகா தன்மையிலிருந்து ஒளிபுகும் நிலைக்கு மாற்ற பயன்படுகிறது.[3] இந்த அறிக்கை உலோக ஐதரைடு அடிப்படையிலான புகைப்படப் பொருட்கள் மற்றும் உயர்தர சன்னல்கள் பற்றிய ஆராய்ச்சி அலைகளைத் தூண்டியது. வாயு உணரி சன்னல்கள் ஐதரசன் வாயு மற்றும் மின்வண்ண கட்டமைப்புகளுக்கு வினையாற்றுகின்றன. இங்கு வெளிப்புற மின்னழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் ஒளிபுகுந்தன்மையைக் கட்டுப்படுத்தலாம்.[4] கணிசமான அளவு ஆக்சிசனைக் கொண்டிருக்கும் போது, இட்ரியம் ஐதரைடு மீளக்கூடிய ஒளிச்சேர்க்கை பண்புகளை வெளிப்படுத்துகிறது.[5] இந்த மாறக்கூடிய ஒளியியல் பண்பு , கூடுதலாக உணரிகள், கண்ணாடிகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற பல தொழில்நுட்ப பயன்பாடுகளில் அவற்றின் பயன்பாட்டை செயல்படுத்துகிறது. ஓர் ஆய்வு முடிவின்படி ஒளிப்படக் குழுவின் இடைவெளி விரிவடைவதோடு, புகைபடத்தில் ஆக்சிசன் செறிவு அதிகரிப்பதன் மூலம் வண்ணத்தின் வலிமை குறைவும் அறியப்படுகிறது.[6]

இட்ரியம் ஐதரைடு உயர்வெப்பநிலை மீகடத்தியாகக் கருதப்படுகிறது.[7]

புதிய அணு உலை வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படும் இட்சியம் ஐதரைடு நியூட்ரான் மதிப்பீட்டாளராகவும் பார்க்கப்படுகிறது.][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kume, Tetsuji; Ohura, Hiroyuki; Takeichi, Tomoo; Ohmura, Ayako; Machida, Akihiko; Watanuki, Tetsu; Aoki, Katsutoshi; Sasaki, Shigeo et al. (31 August 2011). "High-pressure study of ScH3: Raman, infrared, and visible absorption spectroscopy". Physical Review B 84 (6): 064132. doi:10.1103/PhysRevB.84.064132. Bibcode: 2011PhRvB..84f4132K. 
  2. Machida, Akihiko (2007). "Unique Structures in Yttrium Trihydride at High Pressure" (PDF). Research Frontiers. SPring 8. pp. 58–59. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
  3. Huiberts, J. N.; Griessen, R.; Rector, J. H.; Wijngaarden, R. J.; Dekker, J. P.; de Groot, Koeman; N J (1996). "Yttrium and lanthanum hydride films with switchable optical properties". Nature 380 (6571): 231. doi:10.1038/380231a0. Bibcode: 1996Natur.380..231H. 
  4. van der Sluis, P.; Mercier, V. M. M. (2001). "Solid state Gd-Mg electrochromic devices with ZrO2Hx electrolyte". Electrochimica Acta 46 (13–14): 2167. doi:10.1016/S0013-4686(01)00375-9. 
  5. Mongstad, T; Plazer-Björkman, C.; Maehlen, J. P.; Mooij, L.; Pivak, Y.; Dam, B.; Marstein, E.; Hauback, B. et al. (2011). "A new thin film photochromic material: Oxygen-containing yttrium hydride". Solar Energy Materials and Solar Cells 95 (12): 3596. doi:10.1016/j.solmat.2011.08.018. Bibcode: 2011arXiv1109.2872M. 
  6. Moldarev, Dmitrii; Moro, Marcos V.; You, Chang C.; Baba, Elbruz M.; Karazhanov, Smagul Zh.; Wolff, Max; Primetzhofer, Daniel (2018-11-26). "Yttrium oxyhydrides for photochromic applications: Correlating composition and optical response". Physical Review Materials 2 (11): 115203. doi:10.1103/PhysRevMaterials.2.115203. Bibcode: 2018PhRvM...2k5203M. https://link.aps.org/doi/10.1103/PhysRevMaterials.2.115203. 
  7. "Scientists Synthesize New High-Temperature Superconductor". interestingengineering.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-12. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  8. "ORNL developing 3D-printed nuclear microreactor : New Nuclear - World Nuclear News". www.world-nuclear-news.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்_ஐதரைடு&oldid=3916230" இலிருந்து மீள்விக்கப்பட்டது