இடைமாநில நெடுஞ்சாலை முறை
Jump to navigation
Jump to search
ஐக்கிய அமெரிக்காவின் டுவைட் டி. ஐசனாவர் இடைமாநில நெடுஞ்சாலை முறை (Interstate Highway System) அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை முறையிலுள்ள ஒரு துணையமைப்பாகும். மொத்தமாக இம்முறையில் 75,376 கிமீ அளவு நெடுஞ்சாலைகள் உள்ளன; இது உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை முறையும் உலக வரலாற்றில் மிகப்பெரிய பொதுப்பணித் திட்டமும் ஆகும். அமெரிக்காவின் பல முக்கியமான நகரங்களிலும் ஒரு இடைமாநில நெடுஞ்சாலையாக இருக்கும்.
இச்சாலைகளின் சந்திகளில் போக்குவரத்து ஒலிகள் கிடையாது; பல சந்திகளில் வாகனங்கள் மேம்பாலங்களை பயன்படுத்தி இடைமாற்றுச்சந்திகளால் வேறெந்த நெடுஞ்சாலைக்கு செல்லவும். பொதுவாக இச்சாலைகளின் விரைவு எல்லைகள் பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட 100 கிமீ/மணித்தியாலம் ஆகும்; கிராமப் பகுதிகளில் சில இடத்தில் 130 கிமீ/மணித்தியாலத்துக்கு மேலும் இருக்கும்.