உள்ளடக்கத்துக்குச் செல்

இடும்பில்புறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடும்பில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இடும்பில்புறம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரு ஊர். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இதனைப் பாடியுள்ளார். இந்தச் செங்குட்டுவன் தன் கங்கைக்கரை வெற்றிக்குப் பின்னர் அந்த வெற்றியின் அடையாளமாக இமயமலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்துவிட்டு கண்ணகிக்குச் சிலைவடிக்கும் கல்லுடன் தன் நாட்டுக்கு மீண்டபோது இடும்பிற்புறம் என்னும் ஊரில் தங்கினானாம். அப்போது அங்கு வந்து அவனைத் தாக்கிய வயவல்கள் அழிந்தொழியும்படி அவர்களின் வியலூரை நூறினானாம். (இச் செய்தி இப் பத்தின் பதிகத்தில் உள்ளது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடும்பில்புறம்&oldid=4131942" இலிருந்து மீள்விக்கப்பட்டது