இடம் சாரா இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு மொழியின் அனைத்து இலக்கண உருவகங்களும் V → w என்ற உருவாக்க முறையை பின்பற்றினால் அவ்விலக்கணம் இடம் சாரா இலக்கணம் (இ.சா.இ.) (Context Free Grammar) ஆகும். இங்கே V ஒரு non-terminal குறியாகவும், w ஒரு terminal அல்லது/அத்துடன் non-terminal குறிகளாகவும் இருக்கின்றன. ஒரே ஒரு உருவாக்க முறை இருப்பதால் இலக்கண விபரிப்பில் எந்த ஒரு இடத்திலும் V யை w ஆல் பிரதிநிதிபடுத்த முடியும், ஆகையால்தான் மேற்கண்ட இலக்கணத்தை இடம் சாரா இலக்கணம் என்பர். மொழியியலிலும் கணினியியலும் மேல் தந்த வரையறை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

இடம் சாரா இலக்கணம் பேக்கஸ்-நார் முறை இலக்கண விபரிப்பு முறை கொண்டு பொதுவாக விபரிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடம்_சாரா_இலக்கணம்&oldid=1782173" இலிருந்து மீள்விக்கப்பட்டது