இடம்பெயர் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடம்பெயர் திறன் (Migratory aptitude) என்பது ஓர் இடம்பெயர் தொகுதி மறுசீரமைப்பு வினைகளில் இடம்பெயரும் திறனைக் குறிக்கிறது. இத்திறன் அதிக நிலைப்புத்திறன் கொண்ட நேர்மின் கார்பன் அயனியைக் கொடுக்கும் விடுபடும் தொகுதியால் பாதிக்கப்படுகிறது. இடம்பெயரும் குழுவின் எலக்ட்ரான் அடர்த்தி இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதாவது ஐதரைடு > பீனைல் = மூவிணைய-ஆல்க்கைல் > ஈரிணைய – ஆல்க்கைல் > முதல் நிலை ஆல்க்கைல் > மெத்தில் என்ற போக்கில் எலக்ட்ரான் அடர்த்தி மாறுபடுகிறது.

எதிர்மின் கார்பன் அயனியின் நிலைப்புத்தன்மைக்குப் பதிலாக நேர்மின் கார்பன் அயனியின் அதிகரிக்கும் நிலைப்புத்தன்மையின் அடிப்படையை இடம்பெயரும் குழுக்கள் பின்பற்றுகின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடம்பெயர்_திறன்&oldid=2748600" இருந்து மீள்விக்கப்பட்டது