இசைவழி உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசைவழி உளவியல் (Psychology of music) என்பது உளவியல் மற்றும் இசையியலின் ஒரு பகுதியாகும் இது மனிதர்கள் இசைக்கு எவ்வாறு துலங்குகிறார்கள் இசையோடு எத்தகைய நடைமுறையைக் கொண்டிருக்கின்றனர் என்பனவற்றை ஆராயும் இயலாகும்.

அறிமுகம்[தொகு]

இதைப்பற்றிய அறிவு ஆராய்ச்சியில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், அவற்றை உற்று நோக்கியும், கலந்துரையாடியும் பெறப்பட்டதாகும். இதைப்பற்றிய அறிவு செயலாக்கம், புத்தி கூர்மை, படைப்பாற்றல், கல்வி , திறனாய்வு மற்றும் நோய் நீக்கல் போன்ற பல துறைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் அறிவு, திறன், அணுகுமுறை போன்ற பலவற்றை ஆய்வு செய்ய உதவும். இவையல்லாமல் இசைவழி உளவியல் இசை பற்றிய ஆய்வு அல்லாமல் மற்ற புலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.[1][2]

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டிற்கு முன் ஒலி மற்றும் அதன் இசை வடிவம் குறித்துப் பயில்வது சுருதி மற்றும் குரலோசை குறித்த கணக்கு வடிவிலான உருப்படிவம் ( Mathematical modelling )குறித்தே இருந்தது.[3] கிருத்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர் பித்தாகோரசு இது பற்றி ஆய்வு செய்திருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அனெக்சாகொரசு ( Anaxagoras ), போயிதிசு (Boethius), போன்ற கோட்பாட்டு அறிஞர்கள் (Theorists) ஒலியும் அதன் இசை வடிவமும் முழுவதுமாக உடல் சார்ந்த நிலைப் பாட்டிலேயே அணுக முடியும் என்ற கருத்தைக் கூறி வந்தனர். அர்ச்டொசெனசு (Aristoxenus )என்னும் அறிஞர் இதற்கு மாற்றாக , தற்கால இசை உளவியலுக்கு ஒரு முன்னோடியாக இசை, புலன் காணல் (perception) மூலமாகவும் , இதன் காரணமாக எழும் நினைவுகள் மூலமாகவும் அறியலாம் என்னும் கோட்பாட்டை வகுத்தார். இருந்தாலும் இடைக்காலம் மற்றும் மறுமலர்ச்சிக் காலங்களில் இசை உளவியல் பிதாகோரசு வகுத்த வழியின்படி வானவியல், வடிவியல் (Geometry), கணக்கு (Arithmetic) மற்றும் இசை என்னும் நான்கு வகைக்கண்ணோட்டங்களின் மூலமே அறியப்பட்டு வந்தது.[3]

தற்காலம்[தொகு]

மனிதாகள்; எவ்வாறு புலன் காண்கின்றனர் என்பதையும் இசைத் தொடர்பு நிகழ்ச்சிகள் அல்லது அனுபவங்கள் அவர்களிடம் எத்தகைய நடத்தையை தோற்றுவிக்கின்றன எனபதையும் பிறித்தறிதல் வேண்டும்.[4] இசைப்புலன் காணல் (Perception of Music) என்பது ஒலி வேறுபாடுகளை அறிதல், இசையின் பல்வேறு வகையான அதிர்வுகளை அறிதல், தனித்த இசை சுரங்களினின்றும் சுரக்கோவைகளினின்றும் முழுமைநிலை விளைவுகளைப் பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.

இசை வேறுபாடுகளை அறிவதற்கு நினைவு முதன்மையான தேவையாகும். இசைப்பகுதிகளையோ சுரங்களையோ நினைவு கூர்தல் உலகின் மற்ற செயல்களையும் காட்சிகளையும் நினைவு கூர்தலின் வேறுபட்டதாகும். ஏன் எனில் இசை மனிதர்களின் உள்ளத்தின் அகவுணர்வுகளோடு தொடர்புகொண்டுள்ளது. இக்காலத்தில் இசைத்திறன் சோதனைகள் உளவியல் சோதனையின் பகுதியாக அமைந்துள்ளன. சூடர் (Shuter), பென்டிலி (Bentley), பெர்லைன் (Berlyin); போன்ற உளவியலறிஞர்கள் இசைத்திறன் மனிதர்களிடம் இயற்கையாகப் பிறக்கும்பொழுதே பரம்பரை இயல் கூறுகளினால் ஏற்படும் நாட்டமா? சூழமைவு காராணமாக தோற்றுவிக்கக் கூடிய திறனா என்பது பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர். இத்தகைய ஆய்வுகளுக்கு இயல் இசை புலவர்களின் அக அனுபவங்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டியுள்ளனர். இதன் பயனாக இசையில் ஏழு பொதுவான உட்கருத்து அமைந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இசைத் திறன் சோதனைகள் செயற்சோதனைகளாக அமைக்கப்பட்டு இசைக்கணிப்பொறியின் (Musical Computer) மூலமும் அளிக்கப்படுகின்றன. தொழிலகங்களின் எத்தகைய இசையை இசைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் கூடும் என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்து வருகிறது. சில தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் நேரத்தில் மென்மையான இசையை தொழில்கூடங்களில் இசைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவுகள் இன்னும் முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை.

மருத்துவப்பயன்பாடு[தொகு]

உளநோய்களுக்கு இசைவழி சிகிச்சைமுறை: (Musical Therapy) செய்யப்படுகிறது. இத்துறையில் பல ஆய்வுகள் செய்யப்பட்டு உறுதியான முடிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பயன்களும் இசையின் மூலம் பயிர்களை நன்கு வளரச்செய்து பயன்பெறும் முறைகளும் இசைக்கு விலங்குகள் எவ்வாறு துலங்குகின்றன என்பவை விரிவான ஆராய்ச்சிக்கு ஏற்ற துறைகளாக இன்னும் இருந்துவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tan, Siu-Lan; Pfordresher, Peter; Harré, Rom (2010). Psychology of Music: From Sound to Significance. New York: Psychology Press. pp. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84169-868-7.
  2. Thompson, William Forde. Music, Thought, and Feeling: Understanding the Psychology of Music, 2nd Edition. New York: Oxford University Press. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195377079.
  3. 3.0 3.1 Deutsch, Diana "Psychology of Music, History, Antiquity to the 19th century". Grove Music Online, Oxford Music Online. Oxford University Press. அணுகப்பட்டது 9 April 2014. 
  4. அறிவியல் களஞ்சியம் தொகுதி-18, தஞ்சை பல்கலைக் கழக வெளியீடு எண் 344, முனைவர் நே ஜோசப், (2009),ISBN 978-81-7090-387-1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைவழி_உளவியல்&oldid=3581334" இலிருந்து மீள்விக்கப்பட்டது