இசையாயிரம்
Appearance
இசையாயிரம் என்னும் நூலைப்பற்றித் தமிழ்நாவலர் சரிதை [1] என்னும் நூலில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பு
- ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெயே
- கூடுவதும் சக்கிலியக் கோதையே – நீடுபுகழ்
- கச்சிச்செப் பேட்டில் கணிக்குங்கால் செக்கார்,தாம்
- உச்சிக்குப் பின்புகார் ஊர்.
- செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது, புகார் தங்களுக்கு ஊர் என்று பாடச்சொல்ல, சயங்கொண்டார் பாடியது
மேலே கண்ட பாடலும் குறிப்பும் தமிழ்நாவலர் சரிதையில் உள்ளன.
- கச்சிச் செப்பேடு என்பது செக்கார் ஒழுகவேண்டிய விதிகள் பற்றி அரசாணையோடு பிறந்த சாசனமாம். திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு ஐந்தாவது - - - நாடும் நகரமும் கூடியிருந்து ஸ்ரீ காஞ்சிமா நகரில் செப்பேட்டுப்படி செய்யக்கடவ முறைமை என்று தொடங்கிச் செக்கார் செய்யக் கடவனவும், அல்லாதனவுமான விதிகளைக் கூறும் சாசனம். [2]
- பொதுக்கருத்து
- இசையாயிரம் என்னும் நூல் செக்கார் புகழையோ, பல சாதியினரின் புகழையோ பாடும் நூல் ஆகலாம்.
- சயங்கொண்டார் காலம் 12-ஆம் நூற்றாண்டு.
- சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடிய பெருமிதம் எங்கே! இப்படிக் கீழ்த்தர பாடல் பாடிய நிலை எங்கே!
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005