உள்ளடக்கத்துக்குச் செல்

இசுகவுட்டிங் ஃபார் பாய்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுகவுட்டிங் ஃபார் பாய்சு
இசுகவுட்டிங் ஃபார் பாய்சின் முதல் பிரிவின் அட்டைப் பக்கம்
நூலாசிரியர்பேடன் பவல்
பட வரைஞர்பேடன் பவல்
அட்டைப்பட ஓவியர்ஜான் ஹேசல்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
பொருண்மைசாரணியம்
வகைசிறுவர்களுக்கான கையேடு
வெளியிடப்பட்டது24 சனவரி 1908[1]ஹொரேஸ் காக்ஸ்
OCLC492503066

இசுகவுட்டிங் ஃபார் பாய்சு: எ ஹேண்ட்புக் ஃபார் இன்ஸ்ரக்சன் இன் குட் சிட்டிசன்சிப் (Scouting for Boys: A handbook for instruction in good citizenship தமிழாக்கம்: சிறுவர் சாரணியம்: நல்ல குடியுரிமைக்கான வழிகாட்டுதலுக்கான கையேடு) பரவலாக ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ் என அறியப்படும் இந்நூலானது 1908 முதல் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்ட சாரணிய பயிற்சி பற்றிய நூலாகும். ஆரம்பப் பதிப்புகள் ராபர்ட் பேடன் பவல் என்பவரால் எழுதப்பட்டு விளக்கப்பட்டது, பிற்காலப் பதிப்புகள் மற்றவர்களால் மீண்டும் விரிவாக எழுதப்பட்டன. இந்த நூல் முதலில் பிரித்தானியப் பேரரசு மற்றும் குடிமக்களாக கடமையாற்றுவது பற்றிய ஆய்வுகள், கண்காணிப்பு, மரவேலை திறன்கள், சுய-ஒழுக்கம் மற்றும் சுய-மேம்பாடு ஆகியவற்றில் சுய-அறிவுறுத்தலுக்கான கையேடாக இருந்தது. இது அவரது சிறுவயது அனுபவங்கள், இரண்டாம் போயர் போரின் போது மேப்கிங் சிறுவர் படையிலான இவரது அனுபவம் , இங்கிலாந்தின் பிரவுன்சீ தீவில் உள்ள அவரது சோதனை முகாமின் அடிப்படையில் எழுதப்பட்டது.

வரலாறு[தொகு]

இசுகவுட்டிங் ஃபார் பாய்சு (1908) என்பது பேடன்-பவலின் முந்தைய புத்தகமான Aids to Scouting (1899) [2] என்பதன் மறு ஆக்கமாகும். எர்னஸ்ட் தாம்சனால் எழுதப்பட்ட தி பிர்ச் பார்க் ரோல் ஆஃப் தி வூட்கிராஃப்ட் இந்தியன்ஸ் (1906) நூலில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான பயிற்சி யோசனைகளை வெளிப்படையாகவே இந்நூலில் எழுதப்பட்டது. பின்னர், தாம்சன் அமெரிக்காவின் சாரணரின் தலைமை சாரணர் ஆனார். [3] [4]

பதிப்புகள்[தொகு]

இலண்டனைச் சேர்ந்த சி. ஆர்தர் பியர்சன் லிமிடெட் மூலம் தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் உள்ளிட்ட உலகின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் நூல்கள் அச்சிடப்பட்டு, சிறந்த விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. [5] [6] www.scoutingforboysroundtheworld.org என்ற இணையப் பக்கம் 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு பதிப்புகளைக் கண்டறிந்து, இந்த இணையப் பக்கம் வழியாக அணுகக்கூடிய தரவுத்தளத்தில் சேர்த்துள்ளது. பயனர்கள் விடுபட்ட பதிப்புகளையும் தரவுத்தளத்தில் சேர்க்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Boy Scouts movement begins". history.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
  2. Baden-Powell, Robert (1899). Aids to scouting for N.-C.Os. & men. London: Gale & Polden. இணையக் கணினி நூலக மைய எண் 316520848.
  3. "First Scouting Handbook". Order of the Arrow, Boy Scouts of America. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
  4. "Woodcraft Indians". Order of the Arrow, Boy Scouts of America. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
  5. "First Scouting Handbook". Order of the Arrow, Boy Scouts of America. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
  6. Extrapolation for global range of other language publications, and related to the number of Scouts, make a realistic estimate of 100 to 150 million books. Details from Jeal, Tim. Baden-Powell. London: Hutchinson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-170670-X.