இசாத் உசேன்
Appearance
இசாத் உசேன் ( Ishaat Hussain 2, செப்டம்பர் 1947) இந்தியத் தொழிலதிபர் ஆவார். 1983 முதல் டாடா குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.[1]
இளமைக்காலம்
[தொகு]பள்ளிப் படிப்பை டூன் பள்ளியில் முடித்த இசாத் உசேன் தில்லி சுடீபன் கல்லூரியில் பொருளியல் கல்வி படித்து பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து மற்றும் வேல்சுவில் பட்டைய கணக்காயர் பட்டம் பெற்றார்.[2]
பணிகள்
[தொகு]- 1981 ஆம் ஆண்டில் இந்தியன் டியூப் குழுமத்தில் வாரிய உறுப்பினர் ஆனார்.
- டாடா சன்ஸ் நிறுவனத்தில் 1999 இல் சேர்ந்தார்.
- டாடா குழுமத்தைச் சேர்ந்த இசாத் உசேன் மும்பை சந்தைக் கட்டுப்பாட்டு நிறுவனமான செபியில் உறுப்பினராக இருந்தார்.
- இந்தியத் தொழில் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளார்.
- மேலும் வோல்டாஸ் மற்றும் டாடா ஸ்கை ஆகிய நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத் தலைவராக நவம்பர் 2016 இல் பதவி நியமனம் பெற்றார்.[3]
சான்றாவணம்
[தொகு]- ↑ http://www.firstpost.com/business/ishaat-hussain-who-did-not-vote-for-cyrus-mistrys-exit-is-tcs-chairman-a-short-profile-3098046.html
- ↑ http://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=1096248&privcapId=3138393
- ↑ http://www.moneycontrol.com/news/business/ishaat-hussain-appointed-interim-chairmantcs-board_7937801.html