இக்கா இராண்டசெப்பா எலனியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கா இராண்டசெப்பா எலனியசு (Hilkka Rantaseppä-Helenius) (1925–1975) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார்.[1] இவர் ஆசிரியராகப் பணிசெய்ய கணிதவியலைப் பயின்றார். பன்லாந்து வானியலாளராகிய யிர்யோ வைசாலா இவர் வானியலாளராக ஊக்கப்படுத்தியுள்ளார். இவர் சிறுகோள்கள் நோக்கீட்டில் ஈடுபட்டார். இவர் 1956 முதல் 1962 வரை துவோரியா வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் அங்கே உருவாகிய பதவி வெற்றிடத்தில் 1962 இல் நோக்கீட்டாளரானார். அங்கு நோக்கீட்டாலராக 1975 வரை இருந்தார். இவர் வானியல் ஒளியியல் கழகத்தின் கெவோலா வாண்காணகத்தைக் கட்டியமைக்கும் பணியிலும் தன் சொத்தைப் பயன்படுத்தி 1963 இல் ஈடுபட்டுள்ளார்.

இவர் தன் ஐம்பதாம் அகவையில் ஏற்பட்ட நேர்ச்சியால் இறந்தார். 1530 இராண்டசெப்பா எனும் புளோரைன் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]