ஆஸ்திரேலியச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அவுஸ்திரேலிய சட்டம் (Law of Australia) எனப்படுவது இங்கிலாந்தின் பொதுச் சட்டத்திலிருந்து (English common law) வந்த அவுஸ்திரேலியப் பொதுச் சட்டம், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள், அவுஸ்திரேலிய மாநிலங்களும் மண்டலங்களும் உருவாக்கிய சட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

அவுஸ்திரேலிய மாநிலங்களும் மண்டலங்களும் தனித்தனிச் சட்ட அலகுகளாகும். அவை ஒவ்வொன்றும் தமக்கான பாராளுமன்றங்களையும் நீதிமன்ற அமைப்புக்களையும் கொண்டிருக்கின்றன. ஒரு பிரதேசத்தின் சட்டம் மற்றையவற்றில் கவனத்திலெடுக்கப்பட்டாலும் கட்டுப்படுத்துவதாக அமையாது. அதேவேளை வெளிநாட்டு உறவுகள் போன்றவற்றின் கீழ்வரும் சட்டங்கள் அவுஸ்திரேலிய அரசினாலேயே உருவாக்கப்படுகின்றன. அவுஸ்திரேலிய அரசு உருவாக்கும் சட்டங்கள் அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கும் செல்லுபடியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரேலியச்_சட்டம்&oldid=1455045" இருந்து மீள்விக்கப்பட்டது