ஆவு மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Aaval-Leaf.jpg

ஆவு மரம் (Holoptelea integrifolia) தாவரவியல் பெயர்: ஹலோப்டேலியா இன்டெக்ரிபோலியா, உல்மேசி[1][2] 'தாவரக் குடும்பத்தை சேர்ந்த இது நாடெங்கும் ஆண்டிற்கு 800 மில்லி அளவிற்கு மேல் மழையுடைய பகுதிகளில் காணப்படுகிறது. மஹாராஷ்டிராவில் பருவ மழைக் காடுகளிலும், உத்திரப்பிரதேசத்தில் இலையுதிர்க் காடுகளிலும் அதிகமாக உள்ளன. வெப்ப மண்டல மரம். ஆயா, ஆமிலி, தம்பச்சி என்ற வேறு பெயா்களிலும் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது.

பொது பண்புகள்[தொகு]

உயர்ந்து வளரும் மரங்களிலே, மூன்றில் ஒரு பங்கு உயரத்திற்கு மேல் கிளைகள் மேல் நோக்கி பிரிந்து வளர்ந்திடும். அடர்ந்த தழையமைப்புடையது. இலைகள் 7.5 முதல் 12.5 செ.மீட்டர் நீளமும், 2.5 -5.0 செ.மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். காம்புப்பகுதியில் சிறிது வட்டமாகவும் நுனியில் நீண்ட முனையுடனும் இருக்கும். காம்பின் நீளம் 1.25 செ .மீட்டருக்கும் சற்றுக் குறைவானது. இலையின் மேற்புறம் பளபளப்பாகவும் கீழ்ப்புறம் நரம்புகள் பளிச்செனத் தெரியும்.

இலைச் சந்துகளில் பச்சை நிறத்தில் மலர்கள் கொத்துக்களாக காணப்படும். இதன்பின் 'சமாரா' (வெடியா சிறகு கனி) [3] என்ற தட்டையான நெற்றுக்கள் உருவாகும். 2.5 செ. மீட்டர் விட்டமுடைய வட்ட வடிவு நெற்றியில் ஒரு பிளவு இருக்கும். மத்தியில் விதை இருக்கும். விதையைச் சுற்றிச் சிறகு போன்ற அமைப்பு இருப்பதால், காற்றின் மூலம் வெகு தொலைவு வரை பரவப்படும்.

உசாத்துணைகள்[தொகு]

1. Mani P.S & Kamala Nagarajan (1994). Valamtharum marangal - Part - 1, 2nd Ed.,Chennai, New century book house pvt ltd.,

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.theplantlist.org/browse/A/Ulmaceae/
  2. https://en.wikipedia.org/wiki/Ulmaceae
  3. https://en.wikipedia.org/wiki/Samara_(fruit)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவு_மரம்&oldid=2721646" இருந்து மீள்விக்கப்பட்டது