ஆழிமலா சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து தெய்வ சிற்பங்களைக் கொண்ட வெளிச்சுவர்

ஆழிமலா சிவன் கோயில் இந்தியாவில், கேரள மாநிலத்தில் அராபியன் கடற்கரையில், திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்சியம் நகரில் உள்ள ஒரு இந்து கோயிலாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலானது கேரளாவில் உள்ள 18 m (58 அடி) மிக உயரமான சிவனின் சிற்பத்திற்குப் புகழ் பெற்ற கோயிலாகும். [1] இக்கோயில் தமிழ்நாடு கட்டடக்க்லைப் பாணியில் கட்டப்பட்டதாகும். ஆழிமலா சிவன் கோயில் தேவஸ்தான டிரஸ்டால் இது நிர்வகிக்கப்படுகிறது.[2]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கேரளாவில், திருவனந்தபுரம் மாவட்டம் கோட்டுக்கல் கிராமத்தில் புளிங்குடி என்னுமிடத்தில் உள்ளது. விழிஞ்சியம் எதிரில் கடற்கரை அருகில் உள்ள பூவார் சாலையையொட்டி அமைந்துள்ளது. [3][4]

நிர்வாகம்[தொகு]

ஆழிமலா சிவன் கோயில் தேவஸ்தான டிரஸ்டால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த டிரஸ்ட் கோயில் தொடர்பான முக்கியமான முடிவுகளையும், ஆண்டு விழாவிற்கான ஏற்பாட்டினையும் செய்கிறது. [2]

கட்டடக்கலை[தொகு]

இதன் கட்டுமானம், தமிழ்நாட்டுக் கோயில் கலை அடிப்படையாகக் கொண்டதாகும். வெளிச்சுவரிலும், கோபுரத்திலும் வண்ண மயமான பல இந்துக்கடவுளரின் சிற்பங்களான கணேசர், அய்யப்பன், விஷ்ணு, கார்த்திகேயன் மற்றும் அனுமான் போன்ற சிற்பங்கள் உள்ளன. மூலவர் சன்னதியும் பிற துணைச்சன்னதிகளும் பல ஓவியங்களையும், வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. [5]

கங்காதரேசுவரர் சிற்பம்[தொகு]

கங்காதரேசுவரராக சிவன் சிற்பம், பின்புறத்தில் அரபிக்கடல்

கோயிலின் உள்ளே ஒரு உயரமான 18 m (58 அடி) கங்காதரேசுவரர் எனப்படுகின்ற சிவனின் சிற்பம் உள்ளது. [6] ஆழிமலாவைச் சேர்ந்த பி.எஸ்.தேவநாதன் என்ற சிற்பியால் அது வடிக்கப்பட்டது. [7] 2014 ஏப்ரல் 2இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி 2020 டிசம்பர் 31இல் நிறைவுற்று, பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. [8] இச்சிலையானது தற்போது இந்தியாவிலேயே மிக உயரமான, கேரளாவில் அதிக உயரமான சிவன் சிற்பமாகும். [9]

இச்சிற்பத்தில் சிவன் நான்கு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பின் வலது கையில் டமரு உள்ளது. முன் வலது கை வலது தொடையின்மீது உள்ளது. பின் இடது கையில் திரிசூலம் உள்ளது. முன் இடது கை கங்கையைக் கொண்டுள்ள, ஜடாமுடிக்கு இடையே உயர்த்திய நிலையில் உள்ளது. [1] 20 அடி உயரமுள்ள மலையில் இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. [7]

பிற தெய்வங்கள்[தொகு]

இதன் மூலவர் சிவன் ஆவார். கணேசன், பார்வதி ஆகியோர் துணைத்தெய்வங்களாக உள்ளனர். [10] யோகேசுவரனுக்கு தனியாக ஒரு சிறிய சன்னதி உள்ளது.

விழாக்கள்[தொகு]

மலையாள ஆண்டில் மகரம் மாதத்தில் (ஜனவரி-பிப்ரவரி)ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இங்கு கொண்டாடப்படும் மற்றொரு விழா மகா சிவராத்திரி ஆகும். [11] செவ்வாய்க்கிழமை இக்கோயிலுக்கு உகந்த நாளாகக் கருதப்ப்டுகிறது. அந்நாளில் வெகுதொலைவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்துசெல்கிறார்கள். [12]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ലേഖകൻ, മനോരമ (29 December 2020). "കേരളത്തിലെ വലിപ്പമേറിയ ശിവ രൂപം,അല തല്ലുന്ന കടലിനു മേലെ തല ഉയർത്തി ഗംഗാധരേശ്വരൻ; വിസ്മയം". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
  2. 2.0 2.1 S., Gautham (20 January 2021). "Azhimala Shiva Temple to get upgraded facilities". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
  3. Babu George, Sarath (19 September 2023). "Azhimala turns a death trap for visitors" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/azhimala-turns-a-death-trap-for-visitors/article36558683.ece. 
  4. Desk, TFIGLOBAL News (2022-12-31). "Azhimala Shiva Temple, Timings, History, Travel Guide and How to reach". TFIGlobal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-18.
  5. "Aazhimala Siva Temple Thiruvananthapuram". www.hitvm.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-18.
  6. Johnson, George (24 February 2023). "Aazhimala Shiva Temple: Where divinity blends with heritage". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
  7. 7.0 7.1 Theresa, Deena (5 January 2021). "58-ft-tall statue of Lord Shiva in Azhimala attracts many tourists". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
  8. Editorial Desk, Janmabhumi (31 December 2020). "ആറുവര്‍ഷത്തെ കാത്തിരിപ്പിനു വിരാമം; ദൃശ്യവിസ്മയം തീര്‍ത്ത് 58 അടി ഉയരമുള്ള പിനാകധാരി; സോഷ്യല്‍ മീഡിയയില്‍ തരംഗമായി ആഴിമല ഗംഗാധരേശ്വര രൂപം". Janmabhumi. https://janmabhumi.in/2020/12/31/2980087/news/kerala/azhimala-gangadhareshwara-shiva-statue/amp/. 
  9. ഡെസ്ക്, വെബ് (11 January 2021). "കടൽ തീരത്തെ ശിവരൂപ വിസ്മയം; തീർഥാടന ടൂറിസത്തിന്റെ ഭാഗമാകാൻ ആഴിമല ക്ഷേത്രം". Madhyamam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
  10. SINGH, RAJNIKANT. "Azhimala Temple Blog". Tripoto (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-18.
  11. "Aazhimala Shiva Temple | History, Timings, Statue, Beach, Festivals and more | Holidify". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-18.
  12. "കേരളത്തിലെ ഏറ്റവും വലിയ ശിവപ്രതിമ ഉയര്‍ന്ന ആഴിമല ക്ഷേത്ര വിശേഷങ്ങൾ". malayalam.nativeplanet.com (in மலையாளம்). 2023-02-13. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Azhimala Shiva Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழிமலா_சிவன்_கோயில்&oldid=3818937" இலிருந்து மீள்விக்கப்பட்டது