ஆல்டால்
ஆல்டால் அல்லது ஆல்டால் சேர்க்கைப்பொருள் (aldol அல்லது aldol adduct) (ஆல்டிகைடு ஆல்ககால் என்பதிலிருந்து பெறப்பட்டது) ஒரு ஐதராக்சி கீட்டோன் அல்லது ஐதராக்சி ஆல்டிகைடு ஆகும். மேலும் இது ஒரு ஆல்டால் சேர்க்கை வினையின் விளைபொருளாகும். (ஆல்டால் குறுக்க வினைக்கு எதிரானது. குறுக்க வினையில் α,β-நிறைவுறா கார்போனைல் மூலக்கூறு பகுதி கிடைக்கிறது).
தனியாக ”ஆல்டால்” என்ற பெயரைப் பயன்படுத்தும் போது 3-ஐதராக்சிபியூட்டேன்யால் என்ற குறிப்பிட்ட சோ்மத்தைக் குறிக்கிறது..[1]
கண்டுபிடிப்பு
[தொகு]1872 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு வேதியியலாளர் சார்லசு அடோல்ப் உர்ட்சு என்பவரால் ஆல்டால் வினையானது கண்டுபிடிக்கப்பட்டு, கரிம தொகுப்பு முறைகளில் இந்த வினையானது ஒரு இணைப்புக் கொக்கியாக நீடிக்கிறது.
அலெக்சாண்டர் போரோடின் என்பவரும் உர்ட்சுடன் இணைந்து ஆல்டால் வினையின் கண்டுபிடிப்பிற்கு தனது பங்களிப்பை செய்துள்ளார். 1872 ஆம் ஆண்டில் போரோடின் இருசுய வேதியியல் கழகத்தில், ஆல்டிகைடுகளின் வினையில் பெறப்பட்ட புதிய துணை விளைபொருள் ஒன்று ஆல்டிகைடுகள் மற்றும் ஆல்ககால்கள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டுள்ளதைக் குறித்து அறிவித்தார். மேலும், அதே ஆண்டில், உர்ட்சினுடைய ஆய்வு வெளியீடுகளில் கிடைத்த விளைபொருட்களோடு அவை ஒத்திருப்பதையும் குறிப்பிட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/3-Hydroxybutanal#section=Top
- ↑ McMurry, John (2008). Organic Chemistry, 7th Ed. Thomson Brooks/Cole. pp. 877–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-11258-7.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help)