ஆலக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானையின் முதுகினைப் போன்று தோற்றம் அளிக்கும் ஆலக்கோயில் கோபுரம்

ஆலக்கோயில் என்பது இந்து சமய கோயில்களில் ஒரு வகையாகும்.[1] இந்த ஆலக்கோயிலானது ஆனைக்கோயில் என்பதன் மரூஉ ஆகும். சிற்ப சாஸ்திரங்களில் கஜபிருஷ்ட விமானக் கோயில், ஹஸ்திபிருஷ்ட விமானக் கோயில் என்றும் ஹஸ்திபிருஷ்ட விமானக் கோயில் என பல பெயர்களில் வழங்குகின்றனர். இந்த வகையான ஆலக்கோயிலின் விமானம் யானையின் முதுகு போன்று அமைந்துள்ளது.

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில், சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கச்சூர் ஆலக்கோயில், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றம் பக்தவத்சல ஈசுவரர் கோயில், திருவானைக்கா சம்புகேசுவரர் கோயில் போன்ற கோயில்கள் ஆலக்கோயில்களாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-14. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலக்கோயில்&oldid=3542981" இலிருந்து மீள்விக்கப்பட்டது