ஆற்று ஓங்கில்
ஆற்று ஓங்கில்கள் | |
---|---|
![]() கங்கை ஆற்று ஓங்கில் Platanista gangetica | |
Information | |
ஆற்று ஓங்கில்களாக கருதப்படும் குடும்பங்கள் |
|
புது உலகப் பரவல் வரைபடம் | ![]() |
பழைய உலகப் பரவல் வரைபடம் | ![]() |
ஆற்று ஓங்கில்கள் என்பன நன்னீரிலோ அல்லது உவர் நீரிலோ மட்டுமே வாழும் நீர்வாழ் பாலூட்டிகள் ஆகும். ஆற்று ஓங்கில்களில் இந்திய, அமேசானிய, உவர் நீர் ஓங்கில் என மூன்று குடும்பங்கள் உள்ளன.
மற்ற ஓங்கில்களோடு ஒப்பிடுகையில் ஆற்று ஓங்கில்கள் அளவில் சிறியன. இவை 5 அடி நீளம் முதல் 8 அடி நீளம் வரை உள்ளன. பெண் ஆற்று ஓங்கில்கள் ஆண்களை விட அளவில் பெரியவையாக உள்ளன.[1][2] இவை நீரிலும் காற்றிலும் சிறந்த கேட்கும் திறன் பெற்றுள்ளன.
ஆற்று ஓங்கில்கள் உலகில் பரவலாகக் காணப்படுவதில்லை. குறிப்பிட்ட சில ஆறுகளிலும் அவற்றில் டெல்ட்டாப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மீன்களே இவற்றின் முதன்மையான உணவாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ralls, Katherine; Mesnick, Sarah. Sexual Dimorphism. பக். 1005–1011 இம் மூலத்தில் இருந்து 2019-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190725004132/http://www.cetus.ucsd.edu/SIO133/PDF/Sexual%20Dimorphism.pdf. பார்த்த நாள்: 2019-02-28.
- ↑ Reidenberg, Joy S. (2007). "Anatomical adaptations of aquatic mammals". The Anatomical Record 290 (6): 507–513. doi:10.1002/ar.20541. பப்மெட்:17516440.