ஆர். சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சாமி என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் மேலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1]

வாழ்க்கை[தொகு]

1987 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர் 1989 ஆம் ஆண்டு அதிமுகவில் வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு மேலூர் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுக நகரச் செயலாளராக ஆனார். 2000 ஆம் ஆண்டு மாநில இளைஞர் அணி செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு இவர் 2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக  மேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் அணியில் மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளராக செயல்பட்டார். சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், 2018, மே 11 அன்று மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சாமி&oldid=2566264" இருந்து மீள்விக்கப்பட்டது