ஆர்யவதி
தோற்றம்
ஆர்யவதி (Aryavathi) எனப்படுவோர் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1] இவர்கள் கேரளாவில் உள்ள குறிப்பிடத்தக்க சாதிப் பிரிவினரில் ஒன்றாக இருப்பவர்கள். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் இருக்கின்றனர்.