ஆரிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரிடம் என்பது செய்யுள் வகைகளில் ஒன்று.
இதனை முனிக்கணச் செய்யுள் என்றும் கூறுவர்.
இது முனிவர்கள் பாடும் செய்யுள்.
இந்த முனிவர்களை இருடிகள் எனவும் வழங்குவர்.
இந்த முனிவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள்.
கற்றோர் அறியா அறிவு மிக்கவர்கள்.
மனத்தில் எண்ணியபடி ஆக்கவும், அழிக்கவும் பாட வல்லவர்கள்.
உலகியல் செய்யுள்களுக்கு ஓதிய அளவை முறைகள் ஆரிடத்துக்குப் பொருந்தா.[1]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. இவற்றை உணர்த்தும் பாட்டியல் நூற்பாக்கள்.

    உலகியல் செய்யுட்கு ஓதிய அளவையில்
    குறையவும் விதப்பவும் குறையா ஆற்றல்
    இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப

    ஆரிடச் செய்யுள் பாடுதற்க் உரியோர்
    கற்றோர் அறியா அறிவு மிக்கு உடையோர்
    மூவகைக் காலப் பண்பு முறை உணரும்
    ஆற்றல் சான்ற அருந் தவத்தோரே

    மனத்தது பாடும் மாண்பினோரும்
    சினத்தில் கெடப்பாடும் செவ்வியோரும்
    முனிக்கணச் செய்யுள் மொழியவும் பெறுப

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிடம்&oldid=1157651" இலிருந்து மீள்விக்கப்பட்டது