ஆரிஃப் இக்பால் பாட்டி
Appearance
ஆரிஃப் இக்பால் பாட்டி Arif Iqbal Bhatti | |
---|---|
லாகூர் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1995–1997 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 17 அக்டோபர் 1997 லாகூர், பாக்கித்தான் |
தேசியம் | பாக்கித்தனியர் |
ஆரிஃப் இக்பால் உசைன் பாட்டி (Arif Iqbal Hussain Bhatti) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த இவர் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று தீர்ப்பில் நிந்தனை செய்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டார்.[1]
1995 ஆம் ஆண்டில் இவர் நீதியரசர் குர்சித்து அகமதுவுடன் சேர்ந்து இரண்டு கிறித்தவ ஆண்களை நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தார்.[2][3]
நிந்தனை குற்றவாளிகளை விடுவிப்பதன் மூலம் நிந்தனை செய்ததாகக் கூறப்பட்டு 1997 ஆம் ஆண்டில் பரேல்வி கும்பல் அகமத் சேரால் கொலை செய்யப்பட்டார். முன்னதாக, இவர் 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று 14 வயதான சலாமத் மசிக்கு மற்றும் 46 வயதான இரெகமத்து மசிக் ஆகியோரை மத நிந்தனை செய்த வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.[2]