ஆயுள் எதிர்பார்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:35, 4 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: clean up and re-categorisation per CFD using AWB)
2005 ஆண்டுக்கான, உலகளாவிய மனிதர்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு

ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. மனிதர்களின் சராசரி வாழ்நாள் (ஆயுள்) எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.6 இருந்து யப்பானில் 81 வரை இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்புற்ற நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதை இயல்பாக அவதானிக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுள்_எதிர்பார்ப்பு&oldid=2830663" இலிருந்து மீள்விக்கப்பட்டது