ஆம்–இல்லை வினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியலில், ஆம்-இல்லை வினா அல்லது ஆம்-இல்லை கேள்வி (es–no question) இரும வினா, முனைவு வினா அல்லது பொதுக் கேள்வி என்றும் அறியப்படும் இது [1] ஒரு வினா ஆகும். ஆம் அல்லது இல்லை என்ற இரு பதிகளில் ஒன்றை மட்டுமே பெறுவதனை நோக்கமாகக் கொண்டு கேட்கப்படும் கேள்வியாகும். இந்த வினாவிற்கு உறுதியான நேர்மறையான அல்லது எதிர்மறையான பதில் கிடைக்கப்பெறும். இந்தவகையான வினாக்கள் ஆங்கிலத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான வடிவங்களில் கேட்கப்படுகிறது

  • நேர்மறையான ஆம்/இல்லை கேள்வி: "நீங்கள் நாளை இங்கு வருவீர்களா?"
  • எதிர்மறையான ஆம்/இல்லை கேள்வி: "நாளை நீங்கள் இங்கு இருக்க மாட்டீர்களா?" [2]

ஆம்-இல்லை எனும் வினாக்கள் wh எனும் முனைப்பற்ற கேள்விகளுக்கு முரணானவை. wh கேள்விகள் ஆறு ஏனாக்களுடன் (("யார்", "என்ன", "எங்கே", "எப்போது", "ஏன்", "எப்படி") உருவாக்கப்படுகின்றன. இரண்டு மாற்றுகளுக்கு சாத்தியமான பதில்களின் வரம்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உள்ளடக்கக் கேள்விகள் பரந்த அளவிலான மாற்று பதில்களைப் பெறலாம். உதாரணமாக எப்படி இந்தச் செயல் நடைபெற்றது? எனும் வினாவிற்கு பலவகையான விடைகள் கிடைக்கப்பெறலாம். எனவே இவை திறந்த கேள்விகள் எனவும் ஆம்-இல்லை கேள்விகள் மூடப்பட்ட கேள்விகள் எனவும் அழைக்கப்படுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

  1. William Chisholm, Louis T. Milic, John A.C. Greppin. Interrogativity. – John Benjamins Publishing, 1982.
  2. 2.0 2.1 Joseph Evans Grimes (1975). The Thread of Discourse. Walter de Gruyter. பக். 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-279-3164-1. https://archive.org/details/threadofdiscours0000grim/page/66. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்–இல்லை_வினா&oldid=3793425" இலிருந்து மீள்விக்கப்பட்டது