ஆம்பர் சுட்டிரவுகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பர் நிக்கோல் சுட்டிரவுகின்
Amber Nicole Straughn
ஆம்பர் சுட்டிரவுகின்
வானியற்பியலாளர் ஆம்பர் சுட்டிரவுகின், ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி, நாசா கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
பிறப்பு1979-1980
துறைவானியல்
பணியிடங்கள்வானியற்பியலாளர், நாசா கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்அர்க்கன்சாசு பல்கலைக்கழகம், அரிசோனா அரசு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்உரோசர் விண்டுகார்சுட்டு
அறியப்படுவதுவானியல்
இணையதளம்
www.amberstraughn.com

ஆம்பர் நிக்கோல் சுட்டிரவுகின் (Amber Nicole Straughn) (பிறப்பு: 1979)ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாச்சவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரிகிறார். இவர் அறிவியல் தொடர்பாடலுக்காக வடிவமைக்கப்பட்ட ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கித் திட்ட்த்தின் துணைத்திட்ட அறிவியலாளர் ஆவார்.[1] இவரது ஆய்வு ஊடாட்டமும் விண்மீனாக்கமும் நிகழும் பால்வெளிகளைப் பற்றியதாகும். இவர் வானியற்பியல் பிரிவின் இணை இயக்குநராகவும் உள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் அர்க்கன்சாசு பீ பிராஞ்சில் மாட்டுப்பண்ணையையும் பன்றிப்பண்ணையையும் நிறுவினார்.[2][3] வெள்ளரித் தோட்டம் வளர்த்தார்.[4] இவர் தன் பண்ணை வீட்டில் இருந்து நோட்டமிட்ட கன்ன்ங்கரு வானம் இவருக்கு வானியல் ஆர்வத்தைக் கிளரச் செய்தது. விண்மீன் வேட்டைக்குத் தூண்டியது.[5] இவர் தொடக்கநிலைப் பள்ளியில் ப்டிக்கும்போது 1990 இல் அபுள் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான காணொலிப் படங்களைப் பார்த்து, " இந்த நிகழ்வின், அறிவியல் கதையின் பகுதியாக மாற விழைகிறேன்" எனக் கூறியுள்ளார்.இவரது பள்ளியின் தாளாளர் ஒருவர் இவர் அறிவியல் வாழ்க்கையைத் தொடர கோடை உலாநல்கையைப் பெற உதவியுள்ளார். அர்க்கன்சாசு பீ பிராஞ்சு சவுத்சைடு உயர்நிலைப் பள்ளியில் 1998 இல் தன் கலவியை முடித்த்தும்,[6] இவர் தன் குடும்பத்தில் முதன்முதலாக கல்லூரிக் கல்விகற்க முனைந்துள்ளார்.இவர் உயர்தகைமை ஆய்வுநல்கை பெற்று பயேத்திவில்லி யில் உள்ள அர்க்கன்சாசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் மாணவர் குழுவில் இணைந்து நாசாவின் நுண்ணீர்ப்புத் தள ஆய்வுக்கான ஆராய்ச்சி முன்மொழிவை வெற்றிகரமாக 2001 இல் உருவாக்கியுள்ளார். இது வாமிட் வால்வெள்ளி எனப்பட்டது. இவர் 2002 இல் இயற்பியல் இளவல் பட்டம் பெற்றதும், அரிசோனா அரசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மூதறிவியல் பட்டம் பெற்றார். இவருக்கு 2005 இல் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் சார் முன்முனைவுக் குழுவுக்கான நாசா ஆரியத் ஜி. ஜென்கின்சு முன் முனைவர் ஆய்வுநல்கை வழங்கப்பட்டது.[7] இவர் 2008 இல் தன் முனைவர் பட்டத்தை இயற்பியலில் பெற்றார். இவரது முனைவர் ஆய்வுரையின் தலைப்பு, பால்வெளித்தொகுப்புத் தேட்டம்: பால்வெளிகளின் இணைவு உமிழ்வரிப் பகுப்பாய்வு என்பதாகும். இது அபுள் தரவுகளைப் பயன்படுத்தி பால்வெளிகளின் படிமலர்ச்சியை ஆய்வு செய்ய உதவியது.[8]

அறிவியல் பணி[தொகு]

இவர் கோடார்டில் உள்ள ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்தின் அறிவியல்குழுவின் தலைவர் ஆவார். இங்கு இவர் 2008 இல் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராக சேர்ந்தார். இவர் 2011 இல் ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கித் திட்ட அற்வியல் பரப்பலின் துணைத்திட்ட அறிவியலாளர் ஆனார்.[9] அபுள் வின்வெளித் தொலைநோக்கியில் புதியதாக நிறுவப்பட்ட அகற்புல ஒளிப்படக் கருவி 3 ஐப் பயன்ப்டுத்தி தொடக்கநிலைப் புடவிசார் பால்வெளிகளின் இயல்புகளையும் தொலைவுகளையும் அளக்க வழிவகுத்தார்.[10] இவர் கேண்டெல்சு குழுவின் (அகச்சிவப்புக் கதிரண்மிய அண்டத்தொகுப்பு சார்ந்த ஆழ்புறவெளி அளக்கைக் குழுவின்) இணை ஆய்வாளரும் ஆவார். இந்த அளக்கைத் திட்டம் அபுள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி பேரியல் பால்வெளிகளை ஆய்வு செய்கிறது.

மில்கி ஜே. கோட்சுவுடன் ஆம்பர் சுட்டிரவுகின்; கோடார்டுக்குப் பின்னிரவில் வருகைதரும் ஜிம்மி பால்லான்

சுட்டிரவுகின் அறிவியல் பரப்புரையில் ஆர்வம் கவிந்தவர். இவர் பள்ளிகளிலும் வானியல் மன்றங்களிலும் அருங்காட்சியகங்களிலும் கள ஆய்வுக் குழுக்களிலும் தேசிய அளவிலும் அறிவியல் உரைகள் ஆற்றியுள்ளார். இவருக்கு அர்க்கன்சாசு பல்கலைக்கழகம் 2017 இல் முன்னாள் மாணவர் தகைமையை வழங்கியுள்ளது.[11] இது இவரது அறிவியல் பரப்புரை பணிக்காக வழஙப்பட்டது. இவர் முனைவாக ஊடகங்களில் அடிக்கடி செயல்படுகிறார். பல தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். நாசாவுக்கான ஊடக விளம்பரங்களைப் பரப்பியுள்ளார்.[12] TEDx இல் தோன்றியுள்ளார்.[13] PBS NOVA,[14] தேசிய புவிப்பரப்பியல், கண்டுபிடிப்புகோ,[15] வரலாற்று அலைவரிசை, சுபைக் தொலைக்காட்சி, பின்னிரவு ஜிம்மி பலூனின் "Hubble Gotchu" பகுதி போன்றவற்றில் தோன்றி பரப்புரைகள் செய்துள்ளார்.[16] இவர் சிறந்த ஓகக்கலை வல்லுனர் ஆவார்.

இவர் 2013 இல் செசுனா 182 வானூர்தியில் பறந்துகாட்டி வான்வலவர் ஆனார்,[17] இவர் முனைவான ஓகக்கலைப் பயிற்சியாளர் ஆவார். இவர் வாரந்தோறும் ஓகக்கலை வகுப்புகள் நடத்துகிறார்.[1]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

 • 2004, விண்வெளி அறிவியல் கல்வி மேம்பாட்டுக்கான ஜெரால்டு ஏ. சோபன் நினைவு நிதி விருது[18]
 • 2005, நாசா ஆரியத் ஜி. ஜென்கின்சு முன் முனைவர் ஆய்வுநல்கை[1][18]
 • 2007, அமெரிக்க வானியல் கழக சாம்பிலிசு மாணவர் சாதனை விருது[19]
 • 2016, நாசா மீத்தகைமை சாதனை பதக்கம்[20]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Amber Straughn Biography, Webb Telescope/NASA". https://www.jwst.nasa.gov/content/meetTheTeam/people/straughn.html. பார்த்த நாள்: 2020-05-14. 
 2. "Amber Straughn – Star light, star bright". Arkansas Democrat Gazette. 2017-04-23. https://www.arkansasonline.com/news/2017/apr/23/amber-straughn-20170423/. 
 3. Michael Storey (2015-04-21). "Nova show marks Hubble telescope anniversary". Northwest Arkansas Democrat Gazette. https://www.nwaonline.com/news/2015/apr/21/nova-show-marks-hubble-telescope-annive/?features-style. 
 4. Natasha Stamler (2017-08-09). "Interview with Dr. Amber Straughn". TechMaiden. https://www.techmaidenpodcast.com/podcast-library/2017/8/9/episode-6-interview-with-dr-amber-straughn. பார்த்த நாள்: 2020-06-19. 
 5. Straughn, Amber (2019-09-20). "A NASA Scientist Looks Back on Looking up". Arkansas Life இம் மூலத்தில் இருந்து 2020-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200620222239/https://arkansaslife.com/a-nasa-scientist-looks-back-on-looking-up/. 
 6. Benjamin Hardy (2016-10-21). "New frontiers in space: NASA scientist talks exoplanets, Hubble’s successor and more". Arkansas Times. https://arktimes.com/rock-candy/2016/10/21/new-frontiers-in-space-nasa-scientist-talks-exoplanets-hubbles-successor-and-more. 
 7. "Dr. Amber Straughn, Astrophysicist". Discovery Go. https://go.discovery.com/tv-shows/telescope/bios/dr-amber-straughn-astrophysicist. 
 8. Amber N. Straughn (December 2008). "Tracing galaxy assembly: A study of merging and emission-line galaxies". https://ui.adsabs.harvard.edu/abs/2008PhDT........12S/abstract. 
 9. "Brief bio, Dr. Amber N. Straughn". https://science.gsfc.nasa.gov/sed/bio/amber.n.straughn. பார்த்த நாள்: 2020-06-19. 
 10. Amber N. Straughn (2010-12-10). "Hubble Space Telescope WFC3 Early Release Science: Emission-line Galaxies from Infrared Grism Observations". The Astronomical Journal 141. https://doi.org/10.1088/0004-6256/141/1/14. பார்த்த நாள்: 2020-06-19. 
 11. "NASA Astrophysicist Amber Straughn to Lecture on Search for Origins of Life". 2017-04-17. https://news.uark.edu/articles/38510/nasa-astrophysicist-amber-straughn-to-lecture-on-search-for-origins-of-life. பார்த்த நாள்: 2020-06-19. 
 12. "Amber's Story". 2016-12-05. https://www.youtube.com/watch?v=poeCIu7dwm0. பார்த்த நாள்: 2020-06-19. 
 13. "Infant Galaxies to Alien Atmospheres: NASA's Next Huge Telescope – Amber Straughn – TEDxACU". 2017-05-26. https://www.youtube.com/watch?v=6Sa7KpM9Ptk. பார்த்த நாள்: 2020-06-19. 
 14. "Invisible Universe Revealed". 2015-04-22. http://www.pbs.org/wgbh/nova/space/invisible-universe.html. 
 15. "Dr. Amber Straughn, Astrophysicist". https://go.discovery.com/tv-shows/telescope/bios/dr-amber-straughn-astrophysicist. பார்த்த நாள்: 2020-06-19. 
 16. "Late Night with Jimmy Fallon - JWST Gotchu". 2010. https://www.youtube.com/watch?v=eD-WiXuRjXo. பார்த்த நாள்: 2020-06-19. 
 17. On the Move: Dr. Amber Straughn – Astrophysicist and Galactic Explorer. Ocean Blue World. https://www.oceanblueworld.com/movers-shakers/on_the_move/dr-amber-straughn-galactic-explorer/. பார்த்த நாள்: 2020-06-19. 
 18. 18.0 18.1 David Hitt (2007-04-18). "Bringing Extragalactic Data Down to Earth". https://www.nasa.gov/audience/forstudents/postsecondary/features/F_Bringing_Extragalactic_Data_to_Earth_prt.htm. பார்த்த நாள்: 2020-05-22. 
 19. "Chambliss Astronomy Achievement Student Awards". https://aas.org/grants-and-prizes/chambliss-astronomy-achievement-student-awards. பார்த்த நாள்: 2020-05-22. 
 20. "2016 NASA Agency Honor Awards". https://search.nssc.nasa.gov/servlet/sm.web.Fetch/AHA_2016_Full_Listing_for_NASA_People_Complete.pdf?rhid=1000&did=6195384&type=released. பார்த்த நாள்: 2020-06-30. [தொடர்பிழந்த இணைப்பு]