ஆபெர்சியஸ் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆபெர்சியஸ் கல்வெட்டு (Inscription of Abercius), சமயப் புனிதர்கள் வரலாறு சார்ந்த கல்வெட்டு ஆகும். ஃபிரீஜியாவைச் சேர்ந்த ஹையரோபோலிஸ் பிஷொப் ஆபெர்சியஸ் ரோம் நகருக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் சிரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளூடாகப் பயணம் செய்த அவருக்குப் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹையரோபோலிஸ் திரும்பிய சிறிது காலத்திலேயே அவர் காலமானார். எனினும், அதற்கு முன்னரே அவர் தனது கல்லறை வாசகத்தை எழுதி முடித்துவிட்டார். இவ் வாசகத்தின் மூலம் அவர் தான் ரோமில் வாழ்ந்த காலத்தில் பெற்ற அனுபவங்களின் மனப்பதிவுகளை வெளிப்படுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபெர்சியஸ்_கல்வெட்டு&oldid=1347119" இலிருந்து மீள்விக்கப்பட்டது