ஆபிரகாம் இராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரகாம் இராசன்
Abraham Rajan
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய வெற்றியாளர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1981 டோக்கியோ 800 மீ

ஆபிரகாம் இராசன் (Abraham Rajan) ஓர் இந்திய முன்னாள் தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் தற்போது இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளராக சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் உள்ளார்.

தொழில் மற்றும் சாதனைகள்[தொகு]

ஆபிரகாம் இராசன் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 800 மீ., ஓட்டப்பந்தயத்தில் 1: 50.21 விநாடிகள் என்ற நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். [1] [2] இது ஆபிரகாமின் தடகள வாழ்க்கையின் முடிசூட்டு சாதனையாகும். இது தேசிய மற்றும் கல்லூரி மட்டத்திலும் சிறப்பான சாதனையாக இடம்பெற்றது. இவரது 800 மீட்டர் ஓட்ட நேரம் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இன்னும் ஒரு சாதனையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Men". Asian Championships. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 9 November 2010.
  2. "800 m, Men 1981 Asian Athletics Championships". Intersportstats. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரகாம்_இராசன்&oldid=3204312" இலிருந்து மீள்விக்கப்பட்டது