ஆன் ஆர்ன்சுகெமீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆன் ஆர்ன்சுகெமீயர் (Ann Hornschemeier) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் X-கதிர் இரும விண்மீன் திரள்களின் X-கதிர் உமிழ்வு ஆய்வில் சிறப்பான புலமையுள்ளவர்.[1] இவர் நாசாவில் அண்டத் திட்ட இயற்பியல் பிரிவின் முதன்மை அறிவியலாளராக உள்ளார்.[1]

வாழ்க்கைப் பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

இவர்NuSTAR விண்மீன் வெடிப்பு எனும் களப்பணி அறிவியல் குழுவின் தலைவர் ஆவார். இக்குழு ஏழு அருகாமை பால்வெளிகளை நோக்கிடு செய்துவருகிறது.[1] நாசாவில் இவர் உயர் ஆற்றல்வானியற்பியலிலும் அண்டவியலிலும் ஆய்வு செய்கிறார்.[1] இவர் ஐரோப்பிய விண்வெளி முகமையம், 2028 இல் விண்ணில் ஏவ்வுள்ள அதெனா திட்டம் எனும் உயர் ஆற்றல் வானியற்பியலுக்கான மேம்பட்ட தொலைநோக்கித் திட்டம் ஆகிய எதிர்கால ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்று வருகிறார்.[1] Hornschemeier is also an adjunct faculty member at Johns Hopkins University.[2]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 2007 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்ரார். இது வானியலில் அரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் பெண் வானியலாளருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது இவர் மிகத் தொலைவாக உள்ல பால்வெளிகளின் X-கதிர் ஆய்வுக்காக வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_ஆர்ன்சுகெமீயர்&oldid=2481875" இருந்து மீள்விக்கப்பட்டது