ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். சிற்பம், ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். கவின்கலை, தமிழிசை விருதுகளுக்குக் குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த தகுதி வாய்ந்த நூல்கள் இல்லாத போது அத்துறைகளில் தனிப்பெரும் பங்களிப்புச் செய்த கலைஞர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள்[தொகு]

ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 அர்ச்சுனன் தபசு முனைவர் சா. பாலுசாமி காலச்சுவடு பதிப்பகம்
2013 இராஜராசேச்சரம் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்