ஆந்திரூ கிளாடி தெ லா செரூ குரோம்மெலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திரூ கிளாடி தெ லா செரூ குரோம்மெலின் (Andrew Claude de la Cherois Crommelin) (6 பிப்ரவரி 1865 – 20 செப்டம்பர் 1939) பிரெஞ்சு உகுனாத் இன வானியலாளர் ஆவார். இவர் அயர்லாந்து நாட்டு ஆண்டிரிம் கவுண்டியில் உள்ள குழ்செந்துன் எனுமிட்த்தில் பிறந்தார்.[1][2][3][4][5] இவர் இங்கிலாந்தில் மார்ல்பரோ கல்லூரியிலும் டிரினிட்டி கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் சில கால்ம் இலான்சிங் கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார். பிறகு இவர் 1891 அம் ஆண்டில் அரசு(இராயல்) கிரீன்விச் வான்காணகத்தில் நிலையான வேலையில் சேர்ந்தார்.[6][7] இவர்1888 ஆம் ஆண்டில் அரசு வானியல் கழகத்தில் சேர்ந்தார். இவர் 1929 இலிருந்து 1931 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவராகத் திகழ்ந்தார். இவர் 1895 ஆம் ஆண்டில் வானியல் கழகத்தில் சேர்ந்து 1904 இலிருந்து 1906 வரை அதன் தலைவராகவும் விளங்கினார். இவர் அக்கழக வால்வெள்ளிப் பிரிவை 1898 இலிருந்து 1901 வரையிலும் பின்னர், 1907 இலிருந்து 1938 வரியிலும் இயக்கிவந்தார்.[8]

குரோம்மெலின் பல சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். அவற்றுள் 1896, 1900, 1905 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்புகள் அடங்கும்.[9][10][11] இவர் 1919 ஆம் ஆண்டைய சூரிய ஒளிமறைப்புக்காக பிரேசிலில் உள்ள சோபிரல் நகருக்குச் சென்று, ஒளிமறைப்பால் சூரிய ஈர்ப்புப் புலம் உருவாக்கிய ஒளிவிலக்கத்தை அளந்தார்.[12] இந்த நோக்கீடுகளின் முடிவுகள் ஆல்பெர்ட் அய்ன்சுட்டீன் 1916 ஆம் ஆண்டில் முன்மொழிந்த பொதுச் சார்பியல் கோட்பாட்டை உறுதிபடுத்தின.

குரோம்மெலினும் பிளிப் எர்பெர்ட் கோவெலும் 1910 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆல்லே வால்வெள்ளி ஆய்வுகளுக்காக ப்ரெஞ்சு வானியல் கழகம் பிரிக்சு யூல்சு ஜான்சென் விருதை வழங்கியது.[13][14] இதே ஆய்வுக்காக அவர்கள் இருவரும்செருமனி வானியல் கழகத்தில் இருந்து இலிண்டர்மன் பரிசையும் பெற்றனர்.[15][16]

குரோம்மெலின் 1914 ஆம் ஆண்டில் “விண்மீன் உலகம்“ எனும் வானியலுக்கான அறிமுக நூலொன்றை வெளியிட்டார்.[17]

ஆந்திரூ கிளாடி தெ லா செரூ குரோம்மெலின்.

இவருக்க நான்கு குழந்தைகள் உண்டு. இவர்களில் இருவர் 1933 அம் ஆண்டில் என்னர்டேல், தூண் பாறையை ஏறும்போது ஏதத்தில் இறந்துள்ளனர்.[18] தெ லா செரோ கால்வழி குரோம்மெலின் மகள் ஆந்திரினா வழியாக தொடரலானது. மே குரோம்மெலின் எனும் எழுத்தாளர் ஆந்திரூசு வழி வந்த ஒன்றுவிட்ட உடன்பிறப்புகளில் ஒருவர் ஆவார்.

வால்வெள்ளி வல்லுனரான இவர் தன் வட்டணைகளுக்கான கணக்கீடுகளால் முன்பு தவறாக இனங்கண்ட பின்வரும் மூன்று வால்வெள்ளிகளுமே ஒரே ஒற்றைப் பருவமுறை இயக்க வால்வெள்ளியே என நிறுவினார். வால்வெள்ளி பொன்சு 1818 II, வால்வெள்ளி கோகியா-வின்னெக்கே 1873 VII, வால்வெள்ளி 37பி/போர்பெசு 1928 III, 1929.[19][20] இதை "Comet Pons-Coggia-Winnecke-Forbes" எனப் பெயரிடப்பட்டது. பிறகு 1948 இல், இவர் இறந்ததும் அந்த வால்வெள்ளி இவரது பெயரால் பெயரிடப்பட்டது (இப்போது இது, 27பி/குரோம்மெலின்). இந்தப் பெயரிடல் வால்வெள்ளி என்கே போன்றதெனலாம். அது கண்டுபிடித்த பலரது பெயரால் வழங்கப்படாமல், அதன் வட்டணையைத் தீர்மானித்தவரது பெயரால் வழங்கப்படுகிறது. குரோம்மெலினும் மேரி பிராக்டரும் 1937 ஆம் ஆண்டில் "வானியலில் வால்வெள்ளிகள்: அவற்றின் தன்மையும் தோற்ரமும் இடமும்” எனும் வால்வெள்ளி பற்றிய நூலை வெளியிட்டனர்.[21]

குரோம்மெலின் பெயரால் வழங்குபவை[தொகு]

  • வால்வெள்ளி 27பி/குரோம்மெலின்
  • குரோம்மெலின் (நிலாக் குழிப்பள்லம்)
  • குரோம்மெலின் (செவ்வாய்க் குழிப்பள்ளம்)
  • சிறுகோள் 1899 குரோம்மெலின்[22]

மேற்கோள்கள்[தொகு]

  1. Davidson, C. R. (1940). "Andrew Claude de la Cherois Crommelin". Monthly Notices of the Royal Astronomical Society 100 (4): 234–36. doi:10.1093/mnras/100.4.234. Bibcode: 1940MNRAS.100..234D. http://articles.adsabs.harvard.edu/full/1940MNRAS.100..234.. பார்த்த நாள்: 7 November 2015. 
  2. "Obituary: Dr. A. C. D. Crommelin". The Observatory 63 (788): 11–13. 1940. Bibcode: 1940Obs....63...11.. http://articles.adsabs.harvard.edu/full/1940Obs....63...11.. பார்த்த நாள்: 7 November 2015. 
  3. T. E. R. Phillips (1940). "Andrew Claude de la Cherois Crommelin". Journal of the British Astronomical Association 50 (2): 75–78. Bibcode: 1939JBAA...50...75.. http://articles.adsabs.harvard.edu/full/1939JBAA...50...75.. பார்த்த நாள்: 7 November 2015. 
  4. Williams, Thomas R. (2014). "Crommelin, Andrew Claude de la Cherois". in Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.. Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. பக். 483–484. doi:10.1007/978-1-4419-9917-7_9042. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4419-9917-7. 
  5. Meadows, A. Jack (2004). "Crommelin, Andrew Claude de la Cherois (1865–1939), astronomer | Oxford Dictionary of National Biography". Oxford Dictionary of National Biography. Oxford University Press. DOI:10.1093/ref:odnb/57187. 
  6. "Crommelin, Andrew Claude [D'Elacherois or De La Cherois] (CRMN883AC)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  7. "A.C.D. Crommelin". www.crommelin.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  8. "1939JBAA...50...75. Page 75". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  9. 1898MmBAA...6R..23C Page 23. Bibcode: 1898MmBAA...6R..23C. http://articles.adsabs.harvard.edu/full/1898MmBAA...6R..23C. பார்த்த நாள்: 2021-05-21. 
  10. British Astronomical Association; Maunder, E. Walter (Edward Walter) (1901). The total solar eclipse, 1900; report of the expeditions organized by the British astronomical association to observe the total solar eclipse of 1900, May 28. University of California Libraries. London, "Knowledge" office. http://archive.org/details/eclipstotalsolar00britrich. 
  11. British Astronomical Association (1906) (in English). The Total Solar Eclipse, 1905: Reports of Observations Made by Members of the British .... New York Public Library. Eyre and Spottiswoode. http://archive.org/details/totalsolareclip00assogoog. 
  12. 1919Obs....42..368C Page 368. Bibcode: 1919Obs....42..368C. http://articles.adsabs.harvard.edu//full/1919Obs....42..368C/0000368.000.html. பார்த்த நாள்: 2021-05-21. 
  13. "EN-Janssen Prize – Société astronomique de France". saf-astronomie.fr. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  14. "1910JBAA...20..387. Page 391". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  15. "Andrew Claude de la Cherois Crommelin | Science Museum Group Collection". collection.sciencemuseumgroup.org.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  16. Cowell, Philip Herbert; Crommelin, Andrew Claude De la Cherois (1910). Essay on the return of Halleys comet. University of California Libraries. Leipzig, In kommission bei W. Engelmann. Bibcode: 1910erhc.book.....C. http://archive.org/details/essayonreturnofh00cowerich. 
  17. CROMMELIN, Andrew Claude de la Cherois (1914) (in en). The Star World. Collins. https://books.google.com/books?id=3XLpPQAACAAJ&q=star+world,+crommelin. 
  18. "1933JBAA...43..387. Page 390". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  19. 1936AN....261...83C Page 83/84. Bibcode: 1936AN....261...83C. http://articles.adsabs.harvard.edu/full/1936AN....261...83C. பார்த்த நாள்: 2021-05-21. 
  20. 1929MNRAS..89..556C Page 556. Bibcode: 1929MNRAS..89..556C. http://articles.adsabs.harvard.edu/full/1929MNRAS..89..556C. பார்த்த நாள்: 2021-05-21. 
  21. Proctor, Mary; Crommelin, A. C. D. (1937). Comets. Osmania University, Digital Library Of India. The Technical Press Limited Company.. http://archive.org/details/comets032795mbp. 
  22. "(1899) Crommelin". (1899) Crommelin In: Dictionary of Minor Planet Names. Springer. 2003. பக். 152. doi:10.1007/978-3-540-29925-7_1900. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-29925-7.