ஆந்தராகுயினோன் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்தராகுயினோன் செயல்முறை (ANTHRAQUINONE PROCESS) என்பது ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிப்பு முறையாகும். இம்முறை பாஸ் என்பவா் அறிமுகப்படுத்தினாா். ஆக்ஸிஜன் ஒடுக்க முறையில் தொழிற்சாலைகளில் நேரடியாக தனிமங்களில் இருந்து ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. இந்த வினையில் 2- அல்கைல் ஆந்தராகுயினோனில் இருந்து ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் பெல்லேடியம் வினையூக்கியாக செயல்படுகிறது. கரிமவேதிவினையில் ஆக்ஸிஜனுடன் ஆந்தராகுயினோன் வினைபுாிந்து ஹைட்ரஜன் பெராக்சைடு கிடைக்கிறது. வேறுவகையான எத்தில், டெட்ரா மற்றும் பியுட்டைல் ஆகியவற்றை பயன்படுத்தியும் ஹைட்ரஜன் பெராக்சைடை தயாரிக்கலாம்.[1][2]

ஹைட்ரஜன் பெராக்சைடானது பகுதியளவு வடித்தல் முறையில் நீரிலிருந்து பெறலாம். ஹைட்ரஜன் பெராக்சைடுடன் ஒரு சிறிதளவு உடன் விளைபொருட்களும் கிடைக்கும்.இந்த வினையை கீழ்கண்டவாறு எழுதலாம்.

H
2
+ O
2
H
2
O
2

ஆக்ஸிஜனுக்கு பதிலாக ஓசோன் வினைபுாிந்தால் டைஹைட்ரஜன் ட்ரைஆக்சைடை இம்முறையில் தயாரிக்கலாம்.

மேற்கோள்[தொகு]

  1. Goor, G.; Glenneberg, J.; Jacobi, S. (2007). "Hydrogen Peroxide". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a13_443.pub2. Jump up ^
  2. Römpp CD 2006, Georg Thieme Verlag 2006