ஆதித்யா கல்யாண்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்யா கல்யான்பூர்
பிறப்பு21 சூலை 1978 (1978-07-21) (அகவை 45)
மும்பை, மஹாராஸ்ட்ரா, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தான்  மரபு இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)தபேலா
இசைத்துறையில்22
வெளியீட்டு நிறுவனங்கள்ஏகே தயாரிப்பு
இணைந்த செயற்பாடுகள்அல்லா ராக்கா, ஜாகிர்ன் ஹுசைன், அமித் கவ்தேகர்
இணையதளம்adityatabla.com

ஆதித்யா கல்யாண்பூர் (Aditya Kalyanpur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தபலா இசைக்கலைஞர் ஆவார்.[1][2][3] 1978 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 ஆம் தேதியன்று பிறந்தார். பஞ்சாப் கரானா முறையில் தபலா இசைத்து வருகிறார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆதித்யா கல்யாண்பூர் இந்தியாவின் மும்பை நகரத்தில் பிறந்தார். தனது ஐந்தாவது வயதில் தபலா வல்லுநர் மறைந்த அல்லா ரக்கா கான் மற்றும் அவரது மகன் சாகிர் உசைன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது படிப்பைத் தொடங்கினார்.[5] மிதிபாய் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார்.[6][7] 11 வயதாக இருந்தபோது வணிக ரீதியாக வாக் தாச்சுக்காக தனது குரு சாகிர் உசைனுடன் அறிமுகமானார்.[8]

சிவ்குமார் சர்மா, அம்சத் அலி கான், பிரபா அத்ரே, என். ராஜம், சுல்தான் கான், சாகித் பர்வேசு, விசுமோகன் பட், சதீசு வியாசு, சூசாத் கான் மற்றும் நயன் கோசு உள்ளிட்ட கலைஞர்களுடன் இணைந்து இவர் இசைநிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளார். டி.என். கிருட்டிணன், என். ரமணி, யு. சிறீனிவாசு மற்றும் லால்குடி கிருட்டிணன் உள்ளிட்ட கர்நாடக கலைஞர்களுடனும் இவர் சென்றுள்ளார். ஏ.ஆர். கல்யாண்புட்டுடன் சுற்றுப்பயணம் சென்றார்.[9]

விருதுகள்[தொகு]

  • "முதல்" தர கலைஞராக அனைத்து இந்திய வானொலி[10]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_கல்யாண்பூர்&oldid=3640279" இருந்து மீள்விக்கப்பட்டது