ஆண்டர்சன் திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
a3 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.a3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A00
தோற்றம் அடால்பு ஆண்டர்சன், பாரிசு, 1858
பெயரிடப்பட்டது அடால்பு ஆண்டர்சன்
மூலம் அசாதாரண சதுரங்கத் திறப்பு
Chessgames.com opening explorer

சதுரங்க விளையாட்டில் ஆண்டர்சன் திறப்பு ( Anderssen's Opening ) என்பது, a3 என்ற தொடக்க (முதல்) நகர்வை கொண்டுள்ள ஆட்டமாகும். அதிகாரபூர்வமற்ற உலக சம்பியன் அடால்பு ஆண்டர்சனின் பெயரைச் சூட்டி அவருடைய பெயராலேயே இத்தொடக்க நகர்வு அழைக்கப்படுகிறது. 1858 ஆம் ஆண்டில் பவுல் மார்பிக்கு எதிராக ஆண்டர்சன் இத்தொடக்க நகர்வை மூன்று முறை ஆடியுள்ளார்.[1][2][3] அப்போட்டியில் ஆண்டர்சன் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வீழ்த்தப்பட்டார். ஆனால் இவர் புதுமையான இத்தொடக்க நகர்வை ஆடிய மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும், ஒரு ஆட்டத்தில் சமநிலையும் பெற்று 1.5 புள்ளிகளை மூன்று ஆட்டங்களில் பெற்றார்.

ஆண்டர்சன் திறப்பு பொதுவாக எல்லோராலும் ஆடப்படுவதில்லை. அது ஒரு அசாதாரணமான திறப்பு என்று கருதப்படுகிறது. மேலும் இத்திறப்பு சதுரங்க முன்நகர்வுகளுக்கான கலைக் களஞ்சியத்தில் A00 என்ற குறியீடு வழங்கப்பட்டு வகைப்படுத்தப் பட்டுள்ளது.

அலசல்[தொகு]

இந்த தொடக்க நகர்வு, ஆட்டத்தின் முன்னேற்றத்திற்கும் சதுரங்கப்பலகையின் மையப்பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் சிறிதளவே உதவுகிறது. அரிதாக சில ஆட்டங்களில் இந்த 1.a3 என்ற நகர்வு வெள்ளை காய்களுடன் ஆடும் விரருக்கு உபயோகமானதாக இருந்து விடுவதுமுண்டு. ஆனால் ஏதோவொரு உத்வேகத்துடன் ஆடப்படும் இந்த நகர்வு ஒரு குறை முதிர்வு நகர்வாகவே காணப்படுகிறது. உண்மையில், இந்த நகர்வின் அடிப்படைத் திட்டம் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுபவர் கருப்புக் காயை நகர்த்துவது போன்றதாகும். ஆனால் அவர் முதலிலேயே 1.a3 என்ற நகர்வை ஆடிவிட்டார் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். ஒருவேளை 1.a3 e5 2.e4 Nf6 3.Nc3, என்ற போக்கில் ஆட்டம் ஆரம்பமானது என்றால் கருப்பால் ரூயி லோப்பசு திறப்பாட்டம் மூலமாக ஆட்டத்தைத் தொடர முடியாது. மற்றும் கருப்பு ஒருவேளை 3...Bc5, தொடர்ந்து 4.Nf3 என்று விளையாடினால் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடுபவருக்கு இரண்டு குதிரைகள் தடுப்பாட்டம் அமையும். வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுபவரின் a3 நகர்வு பல முயற்சிகளுக்கு முன்பாதுப்பாய் அமைந்துவிடும்.

வெள்ளை ஆட்டக்காரருக்கான ஆண்டர்சனின் இத்திறப்பு நகர்வு சரியாகத் திட்டமிடப்பட்ட ஒரு நகர்வு அல்ல. இது ஒரு காத்திருக்கும் நகர்வு ஆகும். சதுரங்க வீரர்களில் சிலர் இந்நகர்வின் உளவியல் சார்ந்த மதிப்புகளை உணர்ந்து அதர்கேற்ப விளையாடி வெற்றி பெறுகின்றனர். அல்லது அவருடைய சதுரங்கத் திறப்பாட்ட அறிவாற்றலுக்கு இந்நகர்வு பெரிதும் உதவுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஆண்டர்சனின் இத்திறப்பாட்டத்திற்கு பதிலாக கருப்பு ஆட்டக்காரர் பொதுவாக நகர்த்திய நகர்வுகள் வருமாறு, • 1..d5, சதுரங்கப் பலகையின் மையப்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான ஒரு முன்னோக்கிய நகர்வு.

1...g6, இந்நகர்வு மூலமாக மந்திரியை g7 சதுரத்திற்குத் தள்ளி விலாமடிப்புத் தேர் நகர்வைச் செய்யத் திட்டமிடல் ( ஏனென்றால் மந்திரியை b4 சதுரத்திற்குத் தள்ளி ஆட இயலாது ) விலாமடிப்புத் தேர் நகர்வு வெள்ளையின் ராணியின் சற்று பலவீனமான பக்கத்தில் அழுத்தத்தைத் தருகிறது.

1...e5 என்ற நகர்வை ஆடவும் வாய்ப்பு உண்டு. ஆனால் வெள்ளை உடனடியாக 2.c4 என்ற நகர்வின் மூலம் ஆட்டம் ஒருவகையான சிசிலியின் தடுப்பாட்டத்திற்குள் நுழைந்துவிடும் a3 சிப்பாய் வெள்ளைக்கு மிகவும் உபயோஅமான காயாக மாறிவிடும்.

• மாறாக வெள்ளை 2.c4 நகர்வுக்குப் பதிலாக 2.e4 Nf6 3.Nc3 என்ற வேறுபட்ட அணுகுமுறையில் தொடர்ந்தால் ஆட்டம் மென்காரினியின் திறப்பாட்டத்திற்குள் நகர்ந்து விடும்.

பயன்[தொகு]

இந்த நகர்வு நடவடிக்கையின் நவீன ஆதரவாளராக குரோசியாவின் சர்வதேச சதுரங்க சாம்பியன் டாக்டர் சுவோன்கொ கிரெகாக்[4] இருக்கிறார். மார்ச் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆம்பர் சதுரங்கத் தொடர் போட்டியில் அப்போதைய உலகின் முன்னனி ஆட்டக்காரரான மேக்னசு கார்லசன், வசிலி இவான்செக்குக்கு எதிரான கண்மூடியாடும் ஆட்டத்தில் இந்த திறப்பாட்டத்தை விளையாடினார். ஆனால் கார்லசன் பின்னர் இவ்வாட்டத்தை இழந்தார்[5] .

பெயர் மாறுபாடுகள்[தொகு]

1.a3 g6 2.g4 ( ஆண்டர்சன் கூர்முனை ஆட்டம் )

1.a3 e5 2.h3 d5 ( ஊர்ந்து செல்வன உருவாதல் )

1.a3 a5 2.b4 ( போலந்து பலியாட்டம் )

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புக்கள்

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டர்சன்_திறப்பு&oldid=1765750" இருந்து மீள்விக்கப்பட்டது