ஆடுகுதிரைவாதம் (டாடா)
Appearance
முதலாம் உலக மகாயுத்த காலத்தில் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் தொடங்கப்பட்டு 1916 -1922 வரையான காலப்பகுதியில் உக்கிரமாகப் பின்பற்றப்பட்ட பண்பாட்டு இயக்கம் இதுவாகும்.[1] ஆடுகுதிரையினை சிறுவர்கள் 'டாடா' என அழைப்பதனால் குறித்த கலை இலக்கிய வடிவங்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.[2]
இவ்வியக்கம் அடிப்படையில் கட்புலக் கலைகள், இலக்கியம், அரங்கியல் செயற்பாடுகள் மற்றும் வரைகலைகளினூடாக யுத்தத்தைப் புறக்கணிக்கும் அரசியல் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டினர்.
வெகுசனக்கூட்டங்கள், கருத்துரையாடல்கள், அச்சுப்பிரசுரங்கள் முதலானவற்றினூடாக தம் கருத்தியலைப் பரப்பினர்.தகரப் பேணி, மேசை விளிப்பு என்பவற்றில் இசையெழுப்பிப் பாடுதல் முதலான உத்திகளுடன் பல்வேறு ஊடகங்களும் கொள்கை பரப்புதலுக்குப் பயன்பட்டன.