ஆசிரிய முகமூடி அகற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிரிய முகமூடி அகற்றி
நூலாசிரியர்ச. மாடசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்அறிவியல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
மே, 2014
பக்கங்கள்72

ஆசிரிய முகமூடி அகற்றி, பிராங்க் மக்கோர்டு எழுதிய "Teacher Man" என்ற நூலின் வாசிப்பு அனுபவத்தால் ச. மாடசாமி எழுதிய நூல் இது. மக்கோர்ட்டின் கூற்றுகளாக இந்நூலிலுள்ள சில வரிகள்[1]:

  • ”தாமதமாய் மலர்ந்தவன்” என்று மக்கோர்ட் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வார்.
  • தம் பணிக்காலம் முழுவதும் ‘ஆசிரிய முகமூடி’யைக் கழற்ற ஓயாமல் முயன்றவர் மக்கோர்ட்.பணி ஒய்வு பெற்றதும் ”முகமூடி அநேகமாக கழன்று விட்டது. இப்போது என்னால் மூச்சு விட முடிகிறது” என்று எழுதினார் மக்கோர்ட்.
  • "நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்துவிட்டது."
  • "மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே"
  • ”ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான்.அந்த ஒருவன் நான்தான்”.

மேற்கோள்கள்[தொகு]

  1. ச.மாடசாமி (மே 2014). ஆசிரிய முகமூடி அகற்றி. சென்னை: அறிவியல் வெளியீடு. p. 72.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரிய_முகமூடி_அகற்றி&oldid=2274615" இலிருந்து மீள்விக்கப்பட்டது