ஆக்சிஜன் பயன் கூட்டு விகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்சிஜன் பயன் கூட்டு விகிதம் (Oxygen enhancement ratio -OER).புற்றுநோய் தோன்றி வளரும் போது ,இரத்த சிரைகளிலிருந்து 200 மைக்ரான் தொலைவிற்கும் அதிகமான தொலைவில் இருக்கும் உயிரணுக்கள் போதிய ஆக்சிஜனைப் பெறுவதில்லை. இதனையே ஆக்சிஜன் அழுத்தம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் கதிர் மருத்துவம் மேற்கொள்ளும் போது எதிர்பார்க்கும் வளைவுகள் ஏற்படுவதில்லை. அதாவது போதிய அளவு ஆக்சிஜனைப் பெறும் உயிரணுக்கள் அழிக்கப்படுவது போல் ஆக்சிஜன் அழுத்தம் குறைந்த நிலையில் , ஒரே அளவு கதிர்கள் ஏற்கப்பட்டாலும் புற்றுநோய் கண்ட உயிரணுக்கள் அழிக்கப்படுவதில்லை. ஆக்சிஜன் இருக்கும் நிலையில் கதிர்மருத்துவத்தின் பயன் அதிகமாக உள்ளது புலப்படும். இதுவே ஆக்சிஜன் விளைவு எனப்படும்.

மிகை அழுத்த ஆக்சிஜன் அறையுடன் (Hyperbaric oxygen chamber ) கதிர்மருத்துவம் கொடுக்கப்பபடும் போது ஏற்படும் விளைவிற்கும் சாதாரண நிலையில் மருத்துவம் மேற்கொள்ளும் போது ஏற்படும் விளைவிற்கும் உள்ள விகிதம் ஆக்சிஜன் பயன் கூட்டு விகிதம் (OER ) எனப்படும்.இதன் மதிப்பு 2 முதல் 3 வரையிலுள்ளது. மேலும் இது கதிரின் ஆற்றல், புற்றுத் திசுவின் வகை முதலியவற்றையும் பொறுத்திருக்கிறது.

BARC NOTES