ஆஃபினோசீன் இருகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபினோசீன் இருகுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசு(வளையபெண்டாடையீனைல்)ஆஃபினியம் இருகுளோரைடு
இனங்காட்டிகள்
12116-66-4
ChemSpider 10654717
EC number 235-177-5
InChI
  • InChI=1S/2C5H5.2ClH.Hf/c2*1-2-4-5-3-1;;;/h2*1-3H,4H2;2*1H;/q2*-1;;;+4/p-2
    Key: IXKLRFLZVHXNCF-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24942143
SMILES
  • C1C=CC=[C-]1.C1C=CC=[C-]1.[Cl-].[Cl-].[Hf+4]
பண்புகள்
C10H10Cl2Hf
வாய்ப்பாட்டு எடை 379.58 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 230–233 °C (446–451 °F; 503–506 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆஃபினோசீன் இருகுளோரைடு (Hafnocene dichloride) என்பது (C5H5)2HfCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் ஆஃபினியம் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படும் இது சில கரிம கரைப்பான்களில் குறைவாக கரையக்கூடியதாக உள்ளது. இலகுவான ஒத்தவரிசை சேர்மங்களான சிர்க்கோனசீன் இருகுளோரைடு மற்றும் தைட்டானோசீன் இருகுளோரைடு ஆகியவை அதிக கவனத்தைப் பெற்றுள்ளன. ஆனால் ஆஃப்னோசீன் இருகுளோரைடு கல்விசார்ந்த ஆர்வத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், இன்னும் சில கரையக்கூடிய வழிப்பெறுதிகள் ஓலிஃபின் பலபடியாக்கலுக்கான முன்னுரைப் பொருள்களாக உள்ளன. சிர்க்கோனோசீன் ஒத்த வரிசைகளை விட, இந்த சேர்மம் ஒடுக்க வினைக்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டதாக உள்ளது.

ஆஃபினியம் நாற்குளோரைடை இரட்டை இடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுத்தி ஆஃபினோசீன் இருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது.

2 NaC5H5 + HfCl4 → (C5H5)2HfCl2 + 2 NaCl

வழிப்பெறுதிகள்[தொகு]

நீராற்பகுத்தல் வினை முப்படியைக் கொடுக்கிறது.[(C5H5)2HfO]3.[2]

குளோரைடு ஈந்தணைவிகள் மற்ற ஆலைடுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன.[3]

பிசு(பாசுபைடு) (C5H5)2Hf(PR2)2 ஆஃபினோசீன் இருகுளோரைடை இரட்டை இடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுத்துவதால் கிடைக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hafnocene dichloride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Rogers, Robin D.; Vann Bynum, R.; Atwood, Jerry L. (1982). "Synthesis and Crystal Structure of [(η5-C5H5)2HfO]3C6H5Me". Journal of Crystallographic and Spectroscopic Research 12 (3): 239–244. doi:10.1007/BF01195715. 
  3. Druce, P. M.; Kingston, B. M.; Lappert, M. F.; Spalding, T. R.; Srivastava, R. C. (1969). "Metallocene Halides. Part I. Synthesis, Spectra, and Redistribution Equilibria of di-π-Cyclopentadienyldihalogeno-Titanium(IV),-Zirconium-(IV), and -Hafnium(IV)". J. Chem. Soc. A: 2106–2110. doi:10.1039/J19690002106. 
  4. Baker, R. T.; Whitney, J. F.; Wreford, S. S. (1983). "Characterization and Interconversion of Metal-Phosphorus Single and Double bonds: Bis(cyclopentadienyl)zirconium and -Hafnium Bis(diorganophosphide) Complexes". Organometallics 2 (8): 1049–1051. doi:10.1021/om50002a022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃபினோசீன்_இருகுளோரைடு&oldid=3801348" இலிருந்து மீள்விக்கப்பட்டது